Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புபுளியோதரை, புளிக்காய்ச்சல் செய்வது எப்படி ?

    புளியோதரை, புளிக்காய்ச்சல் செய்வது எப்படி ?

    சுவையான புளியோதரை,புளிக்காய்ச்சலை வீட்டிலேயே எளிதாக செய்திடலாம்.

    puli saatham

     தேவையான பொருட்கள் :

    புளி – 2எலுமிச்சை அளவு 

    மஞ்சள் தூள் – 1 ஸ்பூன் 

    உப்பு – தேவையான அளவு 

     

    வறுத்து அரைக்க :

    கடலை பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் 

    உளுந்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் 

    மிளகு -1/2ஸ்பூன் 

    எள்  – 1 ஸ்பூன்  

    வெந்தயம் – 3/4 ஸ்பூன் 

    தனியா – 1/2 ஸ்பூன் 

    மிளகாய் வற்றல் – 5

    பெருங்காயம் – சிறிதளவு 

     

    தாளிக்க :

    நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்

    கடுகு – 1ஸ்பூன் 

    உ.பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் 

    க. பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் 

    கறிவேப்பிலை – 1 கொத்து 

    மிளகாய் வற்றல் – 5

    நிலக்கடலை -2 டேபிள்ஸ்பூன் வறுத்து தோல் நீக்கியது 

    pulikaaichal

    செய்முறை:

    புளியை சிறிதள்வு தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். மேலே கூறிய வறுத்து அரைக்கும் பொருட்களை மிதமான தீயில் வறுத்து , பின்பு ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அடிகனமான வாணலில் 2  டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கரைத்த புளித்தண்ணீரையும், வறுத்து அரைத்த பொடியையும் சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் கலந்து மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடவும். இதனிடையே இன்னொரு வாணலில் மீதமுள்ள நல்லெண்ணெய் ஊற்றி மேலே கூறியுள்ள தாளிக்கும் பொருட்களை தாளித்து எடுத்து, கொதித்து சுருண்டு வந்த புளித்தண்ணீரில் சேர்த்தால் சுவையான மணமுள்ள புளிக்காய்ச்சல் தயார். இந்த புளிகாய்ச்சலை வடித்த ஆறிய சாதத்தில்  பூத்தாப்பில் கிளறி எடுத்தால் புளியோதரை தயார்.

    pullikaaichal

    குறிப்பு : சாதத்தில் புளிக்காய்ச்சல் கிளறும் போது சாதம் சூடாக இருக்கக் கூடாது. புளிக்காய்ச்சல் கிளறும் போதும் அழுத்தி கிளார்க் கூடாது. புளிகாய்ச்சலை குளிர்சாதனப் பெட்டியில் சேகரித்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....