Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்அழகுக் குறிப்புமென்மையான உதடுகள் வேண்டுமா? அப்போது இவற்றை செய்து பாருங்கள்!

    மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்போது இவற்றை செய்து பாருங்கள்!

    பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொதுவாக அவர்களின் உதடுகள் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதிலும் பெண்கள் இதில் முக்கிய பங்கு கொள்கிறார்கள். முக அழகு என்பது கண்ணிலும் உதடுகளிலும் தான் ஒளிந்துள்ளது. அப்படி இருக்க, பலருக்கு கோடைக் காலத்தில் உதடுகள் வறண்டு போய்விடும். இதைத் தடுத்து மென்மையான மற்றும் அழகான உதடுகளை பெறுவதற்கு இங்கே சில குறிப்புகள் உங்களுக்காக… 

    கற்றாழை: 

    கற்றாழை கோழையை எடுத்து உதடுகளில் இரண்டு நிமிடங்கள் நன்றாக தேய்த்து பின், சிறிது நேரம் கழித்து கழுவி வரலாம். 

    பால் பொருள்கள்: 

    பால் பொருள்களான தயிர், வெண்ணெய் போன்றவற்றில் எண்ணெய் கொழுப்பு இருப்பதால் அவற்றை அவ்வப்போது உதடுகளில் தடவி வர மென்மையான பாதத்தை உங்களுக்கு கொடுக்கும். 

    தேன்: 

    நாம் பயன்படுத்தும் லிப் பாம் போன்றவைகளுக்கு பதிலாக இந்தத் தேனை பயன்படுத்தலாம். தேனை சிறிது எடுத்து, உதடுகளில் இரண்டு நிமிடங்கள் நன்றாக தேத்து சிறிது நேரம் ஊறவைத்து கழுவி வர மென்மையாகவும் அழகாகவும் உங்களின் உதடுகளை மாற்றும். 

    வெள்ளரிக்காய்: 

    வெள்ளரிக்காயில், அதிக நீர்மம் இருப்பதால் இதை உதடுகள் மேல் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் தடவி வர, அழகான மற்றும் மென்மையான தோற்றத்தைக் கொடுக்க உதவும். 

    மல்லித்தழை:

    கொத்தமல்லித் தழையானது, உங்களின் உதடுகளை குளிர்ச்சி செய்து பொலிவுறக் காட்டும். இதை, அப்படியே கழுவி உதடுகள் மேல் தேய்த்து வரலாம். இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தை இது கொடுக்க வல்லது. 

    ஆலிவ் மற்றும் பாதாம் எண்ணெய்:

    ஆலிவ் மற்றும் பாதாம் எண்ணெய்களை பயன்படுத்தி வரும்போது உதடுகள் மிக மென்மையாக மாறும். நீங்களே இதை உணருவீர்கள். 

    சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய்: 

    சர்க்கரையில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து அதை, உதடுகளில் தேய்த்து வந்தால் இயற்கையான வண்ணத்தை அளிக்கும். மேலும் உதடுகளில், ஈரப்பதத்தை தங்க வைக்கும். எதுவும் கிடைக்கவில்லை என்றால் வெறும் தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தாலே மென்மையான உதடுகளைப் பெறலாம். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....