Tuesday, March 19, 2024
மேலும்
    Homeவாழ்வியல்மகளிர்பெண்களே எந்த உடைகளுக்கு எந்த காலணிகளை அணிய வேண்டும் தெரியுமா?

    பெண்களே எந்த உடைகளுக்கு எந்த காலணிகளை அணிய வேண்டும் தெரியுமா?

    பெண்கள் பொதுவாக ஆண்களைக் காட்டிலும் அதிகமான உடைகளை வாங்குவர். அப்படி வாங்கும் உடைகளுக்கு ஏற்ற காலணிகளை அணிந்தால் மட்டுமே நாம் உடுத்தும் உடையின் அழகு வெளிப்படும். இங்கே சில குறிப்புகள் உங்களுக்காக…

    பாரம்பரிய வகை  (traditional foot wear)

    இந்தவகைளை பொதுவாக நிகழ்ச்சிகளுக்கும், விழாக்களுக்கும் கோவில்களுக்கும் அணிந்து சென்றால் மிகவும் அழகாக இருக்கும். அப்போது தான் நாம் புடவை, தாவணி, பாவாடை சட்டை, லெகங்கா, சுடிதார் போன்ற உடைகளை அணிவோம். இந்த மாதிரி உடை அணிபவர்கள் இந்த பாரம்பரிய பாதணிகளை அன்றாடம் அணியலாம்.

    தட்டையான வகை (flat foot wear)

    தட்டையான பாதணிகளை பொதுவாக நாம் அன்றாடம் உடுத்தும் உடைகளுக்கு அணியலாம். அலுவலகம் செல்ல, வெளியில் சாதரணமாக செல்ல போன்ற செயல்களுக்கு பயன்படுத்தலாம். தட்டையான பாதணிகளில் முக்கியமாக தேவையற்ற பெல்ட் மாடல், ஸ்ட்ராப் மாடல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால் நாம் அன்றாடம் பயன்படுத்திக் கூடியவை அதை கழட்டி மாற்றுவதற்கு நேரம் எடுக்கும்.

    ஸ்னீக்கர்கள் வகை  (sneakers foot wear)

    ஸ்னீக்கர்களை வெஸ்டர்ன் உடைகளுக்கு பயன்படுத்துவது மிகவும் அழகாக இருக்கும். உங்கள் காலணிகள் நிறத்தையும் நீங்கள் அணியும் உடையின் நிறத்தையும் பொறுத்து தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக கருப்பு மற்றும் வெள்ளை நிற ஸ்னீக்கர்கள் எல்லாவித வெஸ்டர்ன் உடைகளுக்கும் பொருந்தும். 

    ஹீல்ஸ் வகை  (heels foot wear)

    ஹீல்ஸ் பொதுவாக சிலருக்கு பிடிக்கும் பலருக்கு அதனால் வலி ஏற்படும் என்பதால் அதிகம் பயன்படுத்த மாட்டார்கள். அப்படி இருக்க, உங்களுக்கு பொருத்தமான மற்றும் வசதியான காலணிகளை வாங்குவது நல்லது. இவை பொதுவாக அலுவலகம் அல்லது பார்ட்டி போன்ற இடங்களுக்கு அணிந்து சென்றால் அழகாக இருக்கும். ஹீல்ஸ் வகை காலணிகளை அடிக்கும் நிறங்களில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. முன்பு சொன்னது போலவே உங்களின் கால் நிறத்தில் அல்லது கருப்பு மற்றும் மங்கிய வெள்ளையில் வாங்கி அணிந்தால் அழகாகவும் இருக்கும் எல்லாவித நிற உடைக்கும் ஏற்றவாறும் இருக்கும். 

    சாதரண வகை  (flip flop foot wear)

    சாதரணமாக நாம் வீட்டின் அருகில் உள்ள கடைகள், மார்க்கெட் போன்ற இடங்களுக்கு செல்கையில் இந்த வகை காணிகளை அதிகம் பயன்படுத்தலாம். இவை உங்களுக்கு எப்போதும் வசதியாக உணர வைக்கும். இந்தவகை காலணிகளை பொதுவாக கருப்பு நிறத்தில் வாங்கி பயன்படுத்துவது நல்லது. அதிகம் உபயோகிப்பதால் அழுக்குகள் அதிகம் படியும், கருப்பு நிறமாக இருந்தால் அவை தெரியாது. 

    நீங்கள் அதிகம் செய்யும் வேலைக்கேற்ற பாதணி  (working foot wear)

    நீங்கள் அதிகம் நிற்பவர் அல்லது ஓடுபவர் , எடுத்துக்காட்டாக காலையில் வாக்கிங், ஜாகிங், ஸ்விம்மிங் போன்றவற்றில் ஈடுபடுபர்களாக இருந்தால் அதற்கேற்ற ஷூ வகைகளை வாங்கி பயன்படுத்தினால் ஏற்றவாறு இருக்கும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....