Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்செல்லப்பிராணிகள்ஒரு முறை கடித்தால் எலும்பே நொறுங்கிப் போகும் : ராட்வீலர் நாயினங்கள் சிறப்புப் பார்வை!

    ஒரு முறை கடித்தால் எலும்பே நொறுங்கிப் போகும் : ராட்வீலர் நாயினங்கள் சிறப்புப் பார்வை!

    இது நாயா? கன்னுகுட்டியா என்று கேட்கத் தோணும் அளவுக்கு மிகப்பெரிய தோற்றம். முன்கால்களை தரையில் ஊன்றி நெஞ்சை நிமிர்த்தி நின்றால் ஒலிம்பியா போட்டிகளில் பங்கேற்கும் பாடி பில்டர்களைப் போன்ற கட்டுமஸ்தான உடல். இவன் இருக்கும் பக்கம் தலைவைத்து படுக்கக்கூட பயப்படும் கள்வர்கள். இப்படிப்பட்ட அந்த மாவீரனுக்குப் பெயர் ராட்வீலர்.

    தற்பொழுது உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப்பழமையான நாய் இனங்களில் ராட்வீலரும் ஒன்றாகும். இதனுடைய பாரம்பரியம் ரோமானிய காலத்திற்கும் முந்தையது ஆகும். இந்த நாயினங்கள் ராட்வீலர் மெட்ஜெர்ஹண்ட் என்ற பெயரில் ஜெர்மன் மொழியில் அழைக்கப்படும். இந்த ராட்வீலர் இனம் முந்தைய காலங்களில் கால்நடைக் கூட்டங்களை பாதுகாக்கவும், வண்டி இழுக்கவும் பயன்படுத்தப்பட்டது. இறைச்சி கடைகளில் இருந்து இறைச்சியை சிறிய வண்டிகளில் ராட்வீலர் நாயினங்களே இழுத்துச் சென்றன. 

    இன்னும் உலகின் பல பகுதிகளில் பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடவும், பாதுகாப்பு நாய்களாகவும் மற்றும் காவல்துறையில் துப்பறியும் பணிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் ஆயுட்காலம் 9 முதல் 10 ஆண்டுகள் ஆகும். 50 முதல் 60 கிலோ எடை கொண்ட இவை நன்கு பராமரிக்கப்படும் பட்சத்தில் 100 கிலோ எடை வரை வளரக்கூடியவை.

    ராட்வீலர் நாயினங்கள் நல்ல நடுத்தரமான மற்றும் சக்திவாய்ந்த உடலமைப்புடன் காணப்படும். அவற்றின் உடல்தோற்றம் வலிமை மற்றும் தாக்கும் திறனை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும். ஆண் நாய்கள் உடல் அளவில் பெண் நாய்களை விட பெரியதாக இருக்கும். எலும்பின் அளவும் மிகப்பெரியதாக இருக்கும். 

    நல்ல அடர் கருப்பு நிறத்துடன் உட்புறமாக பழுப்பு நிறம் காணப்படும். ஆண் நாய்கள் 24 முதல் 27 இன்ஞ்சுகளும், பெண் நாய்கள் 22 முதல் 25 இன்ஞ்சுகளும் உயர அளவில் காணப்படும். ராட்வீலர் நாய்களின் நெஞ்சு அவற்றின் உயர அளவில் 50 சதவீதம் காணப்படும். முன்புறக்கால்களை அழுத்தி ஊன்றி நேராக தாக்கும் நிலையில் அவற்றின் நெஞ்சு பார்ப்பதற்கு மிகவும் வசீகரமாக இருக்கும். 

    இந்த வகை நாய்கள் ஒரு உரிமையாளருக்கு மட்டுமே கட்டுப்படும் தன்மை கொண்டவை. இரண்டு உரிமையாளர்கள் இருக்கும் பட்சத்தில் தினமும் உணவிடும் உரிமையாளருக்கே மிகவும் விசுவாசமாக இருக்கும். பொதுவாகவே ராட்வீலர் நாய் இனங்கள் மூர்க்கத்தனம் கொண்டவை. எனவே இவற்றின் தன்மையை சாந்தப்படுத்த வெளியில் உலாவவிடுவதோ அல்லது நடைபயிற்சிக்கு அழைத்து செல்வதோ அவசியம். ஒரே இடத்தில் அடைத்து வைத்திருத்தல் மற்றும் ஒரே இடத்தில் கட்டி வைத்திருத்தல் போன்றவை எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். 

    இவை மேலே 22ம், கீழே 20ம் ஆக மொத்தம் 42 பற்களைக் கொண்டவை. கத்தரிக்கோல் வடிவில் இவற்றின் பொருந்துதல் அமைந்திருக்கும். இலக்கை ஒருமுறை கடித்து விட்டால் எலும்பு நொறுங்கும் அளவுக்கு கடிமனாக கடித்து அப்படியே வாயை வைத்துக்கொள்ளும். பின்பு அவ்விடமிருந்து நாயை பிரித்தெடுப்பது மிகவும் கடினம். அந்த வகையில் இவை பாதுகாப்புக்கு மிகபொருத்தமான நாயினம் ஆகும்.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....