Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டுபிடிப்பு

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டுபிடிப்பு

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை எச்சங்களை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நேற்று சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை எச்சங்களை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.

    மானாமதுரை வட்டம், காட்டூரணி அய்யனாா் கோயிலின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வித்தியாசமான கற்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில், வரலாற்று ஆா்வலா் மீனாட்சி சுந்தரம், கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவுக் கல்லூரியின் வரலாற்றுத் துறைப் பேராசிரியா் தங்கமுத்து ஆகியோா் அண்மையில் அந்தப் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுகுறித்து அவா்கள் நேற்று செய்தியாளா்களிடம் பேசியதாவது:

    இந்தப் பகுதியில் ஏராளமான இரும்பு உருக்கு கழிவுகள் பெரும் குவியலாக இருக்கின்றன. இதில் பல துண்டு குழாய்களும் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் அதிக அளவில் இரும்பு தாதுப் பொருள் அடங்கிய தரமான செம்பூரான் பாறைகள் உள்ளன

    சுடுமண்ணால் செய்யப்பட்ட பல குழாய்கள் மேற்பரப்பில் சிதைந்த நிலையில் கிடக்கின்றன. இரும்பு உருக்கும் உலைகளில் பயன்படுத்தப்படும் கெண்டியின் பாகங்கள் இங்கு சிதைந்து காணப்படுகின்றன. மேலும் இந்தப் பகுதியில் தொல்லியல் துறை முறையான ஆய்வை மேற்கொண்டால், சிவகங்கை மாவட்டத்தின் பழங்கால இரும்பு உருக்காலையின் தொன்மையையும் வரலாறையும் அறிய முடியும்.

    இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

    நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....