Wednesday, March 22, 2023
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதொடரும் ஹிஜாப் கலவரம் : வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றம் !!

    தொடரும் ஹிஜாப் கலவரம் : வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றம் !!

    ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணையை கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர்நீதி மன்ற தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்வி நிலையத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் அணிய நீதிக் கேட்டு வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில் இந்த வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார். தீர்ப்பு வழங்கும் வரை மாணவர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

    கர்நாடக அரசு தரப்பில் ஹிஜாப் காவித்துணி எதையுமே நாங்கள் கல்வி நிலையங்களுக்குள் ஆதரிக்கவில்லை என்று மூத்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார். 

    இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் காட்டுத்தீ போல நாடு முழுவதும் பரவி மதக்கலவரம் உருவாகி வன்முறை நிகழ்ந்து வருகின்றது. மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில் கலவரம் நடத்தி வருகின்றனர்.  பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. ஆந்திரா மாநிலம்  ஹைதராபாத்திலும்  இன்று  ஹிஜாப் குறித்து இந்து முஸ்லீம்  போராட்டம் அரங்கேறின.

    மாணவர்களிடையே ஹிஜாப் விவகாரம் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருவதால், பெங்களுருவில் கல்வி நிலையங்களுக்கு அருகே 200 மீட்டர் சுற்றளவில் போராட்டம் நடத்த 2 வாரங்களுக்கு தடை விதித்து கர்நாடக மாநில காவல் துறை  உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த செய்தியினை பற்றி அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.https://www.dinavaasal.com/hijaab-issue-in-karnataka-high-court-rule-today/https://www.dinavaasal.com/hijaab-issue-in-karnataka-high-court-rule-today/

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...