Sunday, March 26, 2023
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு50 சதவீதம் இட ஒதுக்கீடு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு என்ன?

    50 சதவீதம் இட ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு என்ன?

    அரசு மருத்துவர்களின் முதுநிலை மற்றும் சிறப்பு படிப்புக்கான கலந்தாய்வில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 2020 ஆம் ஆண்டு அரசு மருத்துவர்களின் மேல்படிப்பு மற்றும்  சிறப்புப் படிப்பிற்கு 50 சதவீதம் இடம் ஒதுக்கப்படும் என அரசாணையை வெளியிட்டது. 

    ஆனால் இதை எதிர்த்து மருத்துவர்கள் தரப்பிலிருந்து வழக்கு பதிவு, செய்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதி மன்றம் கடந்த 2020 ஆண்டு நவம்பரில் இதற்கான தீர்ப்பை அளித்தது. இதில் அரசு மருத்துவர்கள் உயர் படிப்புகளுக்கு 2020-2021 கல்வியாண்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உத்திரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

    உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசு அறிவித்த அரசாணை செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதை எதிர்த்து 5 மருத்துவர்கள் ரிட் மனுவை தாக்கல் செய்தனர். 

    இந்த வழக்கை, எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு  விசாரிக்கப்பட்டு வந்தது. அதற்கான தீர்ப்பை நேற்று வழங்கியது. இதில் மேற்படிப்பு மற்றும் சிறப்பு படிப்பிற்கான கலந்தாய்வில் 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை இடைக்காலத்தில் செயல்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தமிழக அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். மேலும் ஹோலி பண்டிகை முடிந்த பின் இது தொடர்புடைய மற்ற வழக்குகள் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனால் அரசு மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    yuvaraj

    சூர்யகுமார் யாதவ் மீது எழும் விமர்சனங்கள்; ஆதரவு தந்த யுவராஜ் சிங்

    ஆஸ்திரேலியாக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை டக் அவுட் ஆன இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி...