Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபற்றி எறியும் காட்டுத் தீ! அணைக்க முடியாமல் போராடும் வனத்துறை!

    பற்றி எறியும் காட்டுத் தீ! அணைக்க முடியாமல் போராடும் வனத்துறை!

    திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கடும் காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால் அங்குள்ள மலைப்பகுதியில் கடும் புகை சூழ்ந்துள்ளது.

    கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகும். கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் பல்வேறு நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அங்கு காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. அங்குள்ள பல மலைப் பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் வனத்துறை அங்குள்ள மலைகளின் தீயை அணைக்க போராடி வருகின்றனர். 

    kodaikanal forest fireஇந்தக் காட்டுத் தீயின் காரணமாக மலைப்பகுதியில் இருக்கும் அரியவகை மூலிகை மரங்கள், செடிகள் என அனைத்தும் தீயில் எரிந்து கருகி வருகின்றன. 

    காட்டுத் தீக்கு முக்கிய காரணமாக கோடை வெயிலும், அங்கு சுற்றுலா வரும் பயணிகளும் தான் என்கின்றனர் அப்பகுதியில் வாழும் மக்கள். மேலும் சுற்றுலாப் பயணிகள், பயன்படுத்திப் போடும் நெகிழிப் பைகள், குடிநீர் குப்பிகள் போன்றவற்றாலும் புகைபிடித்து அதைப் அப்படியே தூக்கி எரிவதாலும் இந்த காட்டுத் தீ ஏற்படலாம் என்கின்றனர் அந்த மக்கள். 

    கடந்த சில நாட்களாக இரவும் பகலுமாய் இக்காட்டுத் தீ பரவி வருவதால் அக்காட்டில் kodaikanal forest fire இருந்த விலங்குகள் இடம் பெயரெல்லாம் என்கின்றனர் வனத்துறை. மேலும் அப்பகுதி வனத்துறை காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வெகுவாக ஈடுபட்டும் அடுத்தகட்ட ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....