Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உலகின் 'கவலையே இல்லாத' தீவு இதுதான்!

    உலகின் ‘கவலையே இல்லாத’ தீவு இதுதான்!

    ஹகுனா மட்டாடா (hakuna matata) வை நீங்கள் கேள்விப்படமால் இருந்திருக்க வாய்ப்பில்லை. இதன் பொருள் கவலையே இல்லை என்பதாகும். 1994 ஆம் ஆண்டு டிஸ்னி வெளியிட்ட தி லயன் கிங் திரைப்படத்தின் டைட்டில் பாடலின் பெயரும் ஹக்குனா மட்டாட்டா. அன்றிலிருந்து இன்றுவரை உலகம் முழுவதிலும் ஹகுனா மட்டாட்டா என்ற வார்த்தை பரவலாக உபயோகிக்கப்படுகிறது.

    Zanzibar

    இந்த ஹகுனா மட்டாடா எந்த மொழியின் வார்த்தை? அந்த மொழி எங்கேல்லாம் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது என்றெல்லாம் தெரியுமா?

    ஹகுனா மட்டாடா என்ற வார்த்தை ‛சுவாஹிலி’ எனும் மொழிக்கு சொந்தமானது. காங்கோ, கென்யா, தான்சானியா மற்றும் உகாண்டா போன்ற நாடுகளில் இம்மொழி பேசப்படுகிறது.

    Zanzibar

    ஹகுனா மட்டாடா என்ற வார்த்தையை நாம் திரைப்படத்தில் இருந்து அறிந்தோம். பின்பு அது எந்த மொழி வார்த்தை என்பதை அறிந்தோம். இப்போது ஹகுனா மட்டாடாவுடன் தொடர்புடைய இன்னொரு ஆச்சரியத்தை காண்போம்.

    அதென்னவென்றால் ஹகுனா மட்டாடா என்றொரு தீவு உள்ளதாம். ஆம்! சான்சிபர் என்ற தீவிற்கு இருக்கும் மற்றொரு பெயர் ஹகுனா மட்டாடா தீவு.
    ஹகுனா மட்டாடா என்ற பெயருக்கு எற்றவாறே தீவும் குதுகலத்தை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறதென்றும், கடலும் கடற்கரைகளும் அழகையும் அமைதியையும் தருவதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மசூதிக்கு அருகிலேயே தேவாலயங்கள் இத்தீவில் இருக்கின்றன.

    Zanzibar

    இத்தீவின் இயற்கை வளமானது கண் கவரக்கூடியவையாக இருக்க செய்கிறது. அங்கு வசிக்கும் மக்களின் கலாச்சாரமும் உணவு உடைகளும் ஹகுனா மட்டாடா- வை பிரதிபலிக்கும் வகையிலே உள்ளதாகவும் சான்சிபருக்கு சென்றவர்கள் கூறுகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....