Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல்; ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அணிக்கு புதிய பெயர் சூட்டல்!

    ஐபிஎல்; ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அணிக்கு புதிய பெயர் சூட்டல்!

    இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் பிரபலமான ஒன்றாய் இருந்து வருகிறது அப்படியாக இந்த வருடம் நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிதாக இரு அணிகள் இணைந்துள்ளது. லக்னோவை தலைமையிடமாக கொண்டு ஒரு அணியும், அகமதாபாத் நகரை தலைமையிடமாக கொண்டு ஒரு அணியும் புதிதாக இம்முறை இணைந்துள்ளது. 

    ipl

    அவைகளில், சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் குழுமம் அகமதாபாத் அணியை ஏலத்தில் எடுத்து அதன் உரிமையாளராக ஆனது. அகமதாபாத் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

    IPL2022

    வரவிருக்கும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கையில், அகமதாபாத்தைதை தலைமையிடமாக கொண்டு செயல்பட இருக்கும் அணி, தங்களது அணியின் பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

    gujarat tittans

    ஆஷிஷ் நெஹ்ரா தலைமை பயிற்சியாளராகவும், ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும் செயல்படும் இந்த அணிக்கு ‘குஜராத் டைட்டன்ஸ்’ என்று பெயர் சூட்டப்ட்டுள்ளது. சொந்த ஊரின் ( ‘குஜராத் டைட்டன்ஸ்’) அணிக்கு கேப்டன் பொறுப்பு வகிப்பது மிகவும் ஆனந்தம் தரக்கூடியதாக இருப்பதாக தெரிவித்துள்ளார், ஹர்திக் பாண்ட்யா!

    hardik pandiya captain shubman gill rashidkhan

    ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரஷீத் கானை தலா 15 கோடிக்கும், ஷூப்மன் கில்லை 8 கோடிக்கும் ஒப்பந்தம் செய்துள்ள அகமாதாபாத் அணி பெங்களூரில் நடைபெற இருக்கும் ஏலத்தில் 52 கோடி ரூபாயை செலவிட உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....