Thursday, April 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்களில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. 

    இந்நிலையில், 2023 -2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார். 

    இந்த உரையில் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் மேம்பாட்டுத்துறை, சுற்றுச்சூழல் மேம்பாடு என பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 

    இந்த நிதிநிலை அறிக்கை குறித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்கு பிறகு, மகளிருக்க மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி, செப்டம்பர் மாதம் வழங்கப்படும் முதல் தவணையில் 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து ரூ.29,000 வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    தகுதியுடைய மகளிருக்கே ரூ.1000 வழங்கப்படும் என மடைமாற்றாமல், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    ‘‘உங்களுக்கு எதற்கு இந்த வேலை?’’ – தயாரிப்பாளரை நோக்கி கேள்வி எழுப்பிய அமைச்சர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....