Wednesday, March 22, 2023
மேலும்
  Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பன்னிரண்டு வருடங்களாய் நிகழும் கவர்தல்; அழகும் ஆழமும் கூடிய சமந்தா!

  பன்னிரண்டு வருடங்களாய் நிகழும் கவர்தல்; அழகும் ஆழமும் கூடிய சமந்தா!

  சென்னை பல்லாவரத்தில் இருந்த பெண், இன்று தனது நடிப்புத்திறமையால் இந்தியா முழுவதும் அறியப்படுகிறார். பன்னிரண்டு வருடமாக தொடர்ந்து அனைவரும் கவணிக்ககூடிய ஒரு கதாநாயாகியாக விளங்கி வருகிறார். 

  ஃபேமில் மேன் சீரிஸினால் இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட நடிப்பு இவருடையது. அழகா தொடர்ந்து வசீகரிக்க கூடிய பாவம் இவருடையது. பேச்சில் நமக்கிடையில் உலவும் ஒரு பெண்தான் இவர் என்ற இயல்பை வரவைக்க கூடிய இயல்பு இவருடையது. மேலும் பல அழகான அன்பான குணாதிசயங்களைக் கொண்டவர் சமந்தா!

  2010 இல் நமக்கிடையில் உலவும் பெண்தான் ஆனால் புதிதாய் ஏதோ ஒன்று கூடியிருக்கிறது அது நன்றாகவும் இருக்கிறது என பலரையும் சிந்திக்க வைத்தது, பானா காத்தாடியில் இடம்பெற்ற சமந்தாவின் கதாப்பாத்திரம். ‘என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது… அதன் பெயர் என்னவென கேட்டேன்’ என பானா காத்தாடியில் வரும் பாடலைப் போலவேதான், பானா காத்தாடிக்கு பிறகு தமிழக இளைஞர்கள் பலரும் சமந்தா பெயரை தேடியும் கேட்டும் அறிந்தனர்.

  அதே வருடத்தில், விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் கதாநாயாகியாக நடித்து பலரின் பாராட்டையும் பெற்றார், சமந்தா. அந்த பாராட்டுகளினால் தெலுங்கில் அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியானார், சமந்தா. 

  மீண்டும் 2012 இல் ‘நான் ஈ’ திரைப்படத்தில் பிந்துவாக அழகாலும், நடிப்பாலும் தென்னிந்திய முழுவதையும் கவர்ந்தார் சமந்தா. ‘பென்சிலை சீவிடும் பெண் சிலையே’ என சமந்தாவிற்காக அப்படத்தில் எழுதப்பட்ட வரியில் கச்சிதம் மின்னும். பிந்துவாக சமந்தா செய்த அத்தனையும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டன. ரசிகர்களை கவர்ந்திழுக்கச் செய்தன.

  நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் நித்யாவாக பலதரப்பட்ட உணர்வுகளை அட்டகாசமாக தந்திருப்பார், சமந்தா. பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம், கல்லூரிக்குப் பின்னான வாழ்வியல் என அனைத்திலும் சமந்தா நித்யாவாக வாழ்ந்திருப்பார். திரைப்படத்தில் சமந்தாவின் நடிப்பு ‘ நீதானே என் பொன்வசந்தம்’ என ரசிகர்களையும் பாட வைத்தது.

  இதன்பிறகு சமந்தாவின் மார்கெட் உயர்ந்தது. வெளிவந்த அத்தனை திரைப்படங்களிலும் தனக்கென ஒதுக்கப்பட்ட காதாப்பாத்திர்த்தில் அழகாகவும், ஆழமாகவும் நடித்து்ச்சென்றிருப்பார். திரைப்படங்கள் சொதப்பினாலும், சமந்தா கவர்தலை நிகழ்த்தி விடுவார்.

  இன்று வரை அப்படிதான் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. தமிழக ரசிகர்களை பிரியாவாக, நந்தினியாக, பிந்துவாக, நித்யாவாக, அங்கிதாவாக, மித்ராவாக..மென்மேலும் பல கதாப்பாத்திரங்களால் கவர்ந்த சமந்தாவிற்கு இன்று பிறந்தநாள்!

  கவர்தல் இதோடு நிற்க போவதில்லை என்பதை நாம்  அனைவரும் அறிவோம். அதற்கு சான்றாக இன்று வெளிவந்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தையே கூறலாம். ஆம்! சமந்தாவின் கதீஜா கதாப்பாத்திரம் அனைவரையும் கவரும் விதமாக உள்ளதாக திரைப்படம் பார்த்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். 

  ரசிகர்களை எப்போதும் தான் தேர்ந்தெடுக்கும் கதாப்பாத்திரங்களின் மூலம் கவரவும், அழகான வாழ்வு அமையவும் தினவாசல் சார்பாக அழகும் ஆழமும் கூடிய சமந்தாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

  காத்து வாக்குல ரெண்டு காதல் எப்படி இருக்கு? பொது மக்கள் மற்றும் ரசிகர்களின் பார்வை இதோ!

  சமந்தா – மேகம் வைத்து தைத்த தேகமோ!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  bjp leader

  மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

  மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...