Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபரபரவென இருந்த இறுதி ஓவர்; இதுதான் 'த்ரில்லங்' என ரசிகர்களை உணரவைத்த நிகழ்வு!

    பரபரவென இருந்த இறுதி ஓவர்; இதுதான் ‘த்ரில்லங்’ என ரசிகர்களை உணரவைத்த நிகழ்வு!

    நேற்றைய ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், குஐராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்தப் போட்டியில், முதலில் டாஸ் வென்றது, குஜராத் டைட்டன்ஸ். மேலும், டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் முறை நேற்றுதான் டாஸில் தோல்வியடைந்துள்ளார். 

    சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. கேன் வில்லியம்சன் 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதற்கு அடுத்து வந்த திரிபாதி 16 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மொத்தத்தில் இருபது ஓவர்களின் முடிவில் ஹைதராபாத் அணியானது 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.

    ஹைதராபாத் அணியின் இந்த ஸ்கோருக்கு முக்கியமானவர்கள், அபிஷேக் சர்மா மற்றும் மார்க்ரம் ஆகியோர்தான். இருவரும் முறையே 65 ரன்கள் மற்றும் 56 ரன்கள் எடுத்தனர். குஜராத் அணித்தரப்பில் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 

    இதனையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கில் களமிறங்கியது, குஜராத் டைட்டன்ஸ் அணி. மேலும், தொடக்க ஆட்டக்காரர்களாக டைட்டன்ஸ் அணி சார்பில் சஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

    இருவரில், சுப்மன் கில் 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 10 ரன்களுக்கு வெளியேற குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்கில் தடுமாற்றம் தெரிந்தது. இப்படியாக விக்கெட்டுகள் சரிந்தாலும், ஒருபுறம் நிலைத்து ஆடினார் விருத்திமன் சஹா. இவர் 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அசத்தினார். சஹாவும் அணியின் ஸ்கோர் 122 ஆக இருந்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட மில்லர் 17 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சியளித்தார். ஆனால், ராகுல் திவாட்டியா மற்றும் ரஷித் கான் ஒன்று சேர, தடுமாற்றத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ் நிலையானது. 

    ஆம்! இருவரும் அதிரடியாக விளையாடி ரன் மழையை பொழிந்தனர் என்றே கூற வேண்டும்.

    இறுதி ஓவர்

    இருபதாவது ஓவரின் ஆறு பந்துகளில் 22 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. பேட்டிங் முனையில் ராகுல் திவாட்டியா இருந்தார். மார்கோ ஜான்சன் இருபதாவது ஓவரை வீசினார். 

    முதல் பந்திலேயே ராகுல் திவாட்டியா பந்தை சிக்சருக்கு அனுப்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இரண்டாவது பந்தில் ராகுல் ஒரு ரன் எடுக்க, பேட்டிங் முனைக்கு ரஷித் கான் வந்தார். இவரும் ஒரு சிக்ஸர் அடிக்க, குஜராத் அணிக்கு மூன்று பந்துகளில் ஒன்பது ரன்கள் தேவையாயிற்று.

    இறுதி ஓவரின் நான்காவது பந்து ரன் ஏதும் எடுக்கப்படாமல் போக, இரு அணிகள் பக்கமும் விறுவிறுப்பு கூடியது. மீதமிருந்த இரண்டு பந்துகளுக்கு ஒன்பது ரன்கள் தேவை. இப்போது ஐந்தாவது பந்தை மார்கோ ஜான்சன் வீசினார். வேகமாக வந்த இப்பந்தை சிக்ஸருக்கு திருப்பி விட்டார் ரஷித் கான். 

    இப்போது, ஒரு பந்துக்கு மூன்று ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ரஷித் கான் வீசப்பட்ட பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். இந்த சிக்ஸரின் மூலம் குஜராத் அணி தனது வெற்றியைப் பெற்றது.

    ஆட்டநாயகன் விருது 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

    தமிழகம் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைக்காதது அநீதி – பிரதமர் மோடி பேச்சு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....