Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகோவிந்தன்தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பு விவகாரம்: தவிக்கும் மக்கள்!

    கோவிந்தன்தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பு விவகாரம்: தவிக்கும் மக்கள்!

    ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவிந்தன்தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பு விவகாரம் தற்போது அதிகாரிகளுக்கு பெரும் பிரச்சனை ஆகி உள்ளது. இதனால் அங்கு உள்ள மக்களுக்கும் பல சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன.முதலில் பிரச்சனைதான் என்ன ? வாருங்கள் பார்ப்போம்.

    சென்னை அடுத்த ஆவடி, கவரப்பாளையம், பாலாஜி நகரில், கோவிந்தன் தாங்கல் ஏரி அமைந்து உள்ளது. இந்த ஏரி பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல், கழிவு நீர் கலந்து, கழிவு நீர் குட்டை போல் தற்போது காட்சியளிக்கிறது. இதனால் அந்த ஏரியை சுற்றி உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

    மேலும், இந்த ஏரியைச் சுற்றி தனலட்சுமி நகர், காந்தி நகர், காவேரி தெரு, கங்கா தெரு உட்பட, 15 நகர்கள் மற்றும் 60 தெருக்கள் உள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வசிக்கின்றனர்.

    இப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாக இந்த கோவிந்தன் தாங்கல் ஏரி தான் விளங்குகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஏரியை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.

    ஏரியின் சுற்று வட்டார பகுதியிலுள்ள பாலாஜி நகர் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை, அங்குள்ள விளையாட்டு பூங்கா உள்வழியாக, குழாய் வாயிலாக ஏரியில் விடுகின்றனர். இதனால், ஏரி நீரின் நிறம் கருப்பாக மாறியுள்ளது. இந்த நீரை கால்நடைகள் கூட அருந்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    பருவ மழை காலங்களில், எச்.வி.எப்., பகுதியில் இருந்து வரும் நீரும், இந்த ஏரியில் தான் கலக்கிறது. அத்துடன், 50 ஆண்டுகளுக்கும் மேலாக துார் வாரப்படாமல் இருக்கும் இந்த ஏரியில், தற்போது ஆகாய தாமரையும் சூழ்ந்து தண்ணீரே தெரியாதவாறு காட்சியளிக்கிறது.

    இது மட்டும் இன்றி, இரண்டு மாதங்களுக்கு முன்பு, சமூக அக்கறை இல்லாத சிலர், ஏரியின் சுற்றுச் சுவரை உடைத்து நீரை வெளியேற்ற முயற்சித்தனர். அப்போது, அங்கு குடியிருக்கும் மக்களின் உதவியால் ஏரிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க முடிந்தது.

    கோவிந்தன்தாங்கல் ஏரியின் பாதுகாப்பு குறித்து, பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும், எந்த பயனும் இல்லை என்று தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ஏரியை மீட்டு துாய்மைப்படுத்த வேண்டும். மேலும் சமூக விரோதிகள் நுழையாதபடி சுற்றுச்சுவரின் அகலத்தையும் உயர்த்த வேண்டுமென மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    அது மட்டும் இன்றி, வரும் காலங்களில் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றி ஏரி நீரை முடிந்த அளவு பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு உதவுமாறு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    ஏரியை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் முறையீட்டு உள்ளனர்.

    இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து உதவி : மக்கள் உதவக்கோரி முதல்வர் வேண்டுகோள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....