Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசொத்து வரியை உயர்த்தியது தமிழ்நாடு அரசு! சீராய்வுக் குழு பரிந்துரை!

    சொத்து வரியை உயர்த்தியது தமிழ்நாடு அரசு! சீராய்வுக் குழு பரிந்துரை!

    தமிழ்நாட்டில் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை சொத்து வரியை உயர்த்தி உள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 

    இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாததால் தமிழ்நாடு அரசின் வருவாய் நிலையில் செலவீனங்கள் அதிகரித்து வரவு குறைந்துள்ளாதால் இந்த சொத்து வரி உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசினால் அனுமதிக்கப்பட்ட 15 -ஆவது நிதி ஆணையத்தின் நிபந்தனையின்படி இந்த சொத்து வரி உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சொத்து வரி சீராய்வுக் குழு பரிந்துரைக்கப்பட்டதை தமிழ்நாடு அரசால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

    1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு சொத்து வரியை உயர்த்தி உள்ளது 

    • 600 சதுர அடிக்கும் கீழ் பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு  25 சதவிகிதம் சொத்துவரி உயர்வு 
    • 601 – 1200 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு 50 சதவிகிதம் சொத்துவரி உயர்வு 
    • 1201 – 1800 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு  75 சதவிகிதம் சொத்துவரி உயர்வு  
    • 1800 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு 75 சதவிகிதம் சொத்து வரி உயர்வு செய்யப்படுகிறது. 
    • வணிக பயன்பாடு கட்டிடங்களுக்கு 100 சதவிகித சொத்து வரி உயர்வு செய்யப்படுகிறது.
    • கல்வி நிறுவனங்கள் பயன்பாடு கட்டிடங்களுக்கு 75 சதவிகிதம் சொத்து வரி உயர்வு செய்யப்படுகிறது. 

    சென்னை மாநகராட்சியில் பிரதான வணிக பகுதிகளுக்கு 150 சதவிகிதம் சொத்துவரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல் சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் அதற்கான சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    முன்பு செய்த சொத்து வரி சீராய்வுகளின் போது நான்கு வகையாக பிரிக்கப்படவில்லை. இப்போது நடந்துள்ள ஆய்வில் நான்கு வகையாக பிரிக்கப்பட்டு செய்யப்பட்டிருக்கிறது. 

    சொத்துவரி சீராய்வு குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு அந்தந்த மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு சொத்து வரி சீராய்வு செய்ய தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....