Monday, March 18, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்பறக்கும் கேமரா : கோ ப்ரோ ஹீரோ 10 பிளாக் போன் பற்றிய சுவாரசிய தகவல்கள்..

    பறக்கும் கேமரா : கோ ப்ரோ ஹீரோ 10 பிளாக் போன் பற்றிய சுவாரசிய தகவல்கள்..

    கோ ப்ரோ நிறுவனம் தன்னுடைய புதிய கோ ப்ரோ ஹீரோ 10 பிளாக் போன்ஸை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் அந்நிறுவனம் எஃப்பிவி என்று சொல்லக்கூடிய முதல்நபர் பார்வை காட்சிகளை உருவாக்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவதை அறிய முடிகிறது. ஆனால், இது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும்.  

    பெயருக்கு ஏற்றார் போல இந்த கோ ப்ரோ ஹீரோ 10 பிளாக், சந்தையில் ஒரு நல்ல மதிப்பை பெற்றுள்ளது. இதன் எடை வெறும் 54 கிராம் மட்டுமே ஆகும். ஆகையால், மிக எளிதாக முதல்நபர் பார்வை காட்சிகளை காட்சிப்படுத்த முடியும். இதன் அடிப்படை விலையாக 499 டாலர்கள் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 

    கோ ப்ரோ நிறுவனத்தின் சந்தாதாரராக இருக்கும் பட்சத்தில் 150 டாலர்கள் வரை குறைவாகப் பெறலாம். கோ ப்ரோ நிறுவனத்தின் சந்தாதாரராக இருப்பதில் நிறைய பயன்கள் உண்டு. அளவற்ற கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் கேமராவை ரீப்ளேஸ்மென்ட் செய்யும் வசதி ஆகியவை அதில் உள்ளன. 

    இதன் மூலம் எவ்வளவு அட்டகாசமான காணொளிகளையும் உருவாக்க முடியும் என்று ஒரு மாதிரி காணொளியை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த கோ ப்ரோ ஹீரோ 10 பிளாக் போன் 5.3கே 60பி அளவில் காணொளிகளை உருவாக்கி வருகிறது. இன்றைய நிலையில் ஒருசில ஆக்ஷன் கேமராக்கள் மட்டுமே உருவாக்கக்கூடிய ஹைபர் ஸ்மூத் 4.0 நிலைப்படுத்துதல் இந்த கேமிராவில் உள்ளது. இதற்கு எம்மி விருது அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

    பறக்கும் கேமராக்கள் மூலம் முதல்நபர் பார்வை காட்சிகளை உருவாக்கும் முனைப்பில் தான் கோ ப்ரோ ஹீரோ 10 பிளாக் போனின் எடையில் அதிகளவு கவனம் செலுத்தப்பட்டு குறைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் நடவடிக்கையாக இதில் இருந்து பேட்டரி நீக்கப்பட்டுள்ளது. இதன் அகலம் 29 மில்லி மீட்டர் மற்றும் உயரம் 68 மில்லி மீட்டர் ஆகும். இவ்வளவு புது மாற்றங்களுடன் தான் இந்த புதிய கோ ப்ரோ ஹீரோ 10 பிளாக் போன் களத்தில் இறங்கியுள்ளது. 

    சில அற்புதமான பதிவு செய்யும் தொழில்நுட்பங்களுடன் இதில் 1/2.3″ சென்சார் இதில் உள்ளது. இதில் 5.3கே காணொளி 24,50 மற்றும் 60பி ரிசொலுயுசன் வைடு காட்சிகளிலும், ஸ்லோ மோஷன் வீடியோக்கள் 4கே அளவில் 120பி மற்றும் நம்பவே முடியாத 240பி ஆகியவை 2.7கே வைடு ரிசொலுயுஷனில் கிடைக்கிறது. மேலும் இதில் 19.6எம்பி அளவில் போட்டோக்களும், 5கே 4:3 அளவில் வீடியோக்களும் கிடைக்கின்றன. 

    இதில் முன் மற்றும் பின்திரைகள் இல்லை. ஆனால், அது பல மைல்களுக்கு மேலே பறந்து கொண்டிருக்கும் பறக்கும் கேமராக்களில் பெரிய அளவில் பயனைத் தராது. கேமெராவில் வைத்தே காணொளிகளை பார்க்க முடியாது. பழைய பள்ளிக்கூட முறையான மெமரி கார்டை கழட்டி கணினியில் போட்டு முறைக்கு தான் செல்ல வேண்டும். 

    எது எப்படியோ ? கோ ப்ரோ நிறுவனம் பறக்கும் முதல்நபர் பார்வை காட்சிகளை உருவாக்க முன்னெடுத்து இந்த கேமராக்களை உருவாக்கியது புதிய மாற்றங்கள் நடைபெற வழிவகுக்கும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....