Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்காலநிலை மாற்றத்தால் உருவாகும் புதிய வைரஸ்கள் : ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களுக்கு அபாயம்

    காலநிலை மாற்றத்தால் உருவாகும் புதிய வைரஸ்கள் : ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களுக்கு அபாயம்

    காலநிலை மாற்றத்தால் புதிய வைரஸ்கள் பல 2070ஆம் ஆண்டுக்குள் விலங்குகள் இடையே உருவாகும் என்றும், அது விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவும் அபாயமும் உள்ளது என்று தெரிவித்துள்ளது சமீபத்திய ஆய்வு. 

    இந்த முடிவுகள் கடந்த ஆண்டுகளாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களில் நடந்து வரும் மாற்றங்களோடு ஒத்துப் போகின்றன. ப்ளூ காய்ச்சல். ஹெச்ஐவி, எபோலா மற்றும் கொரோனா வைரஸ் போன்ற நோய்கள் மனிதர்களிடம் பரவியதற்கு முக்கிய காரணம் விலங்குகள் ஆகும். இவை ஆபிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்கள் நோய்களுக்கான ஹாட்ஸ்பாட் போன்ற கூற்றை மேலும் உண்மையாக்குகிறது. 

    இது பற்றி பேசியுள்ள ஆராய்ச்சியாளர்கள், இன்னும் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பூமியில் அதிகரித்தால் புதிய வைரஸ்கள் உருவாக அது வழிவகை செய்யும் என்றும் , அந்த வைரஸ்கள் பாலூட்டிகள் மூலம் பரவுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், பாலூட்டிகளின் ஊடே மட்டும் இது 4000 முறை பரவும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவற்றில் பறவைகள் மற்றும் கடல்சாற் உயிரினங்கள் சேர்க்கப்படவில்லை. 

    அனைத்து வைரஸ்களும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதில்லை. இதன் க்ராஸ்- வைரஸ்கள் மட்டுமே மனிதர்களுக்கு தன்மை படைத்தவையாக இருக்கும். இது உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

    விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வரும் நோய்கள் பற்றிய மற்றும் அதன் வளர்ச்சி பற்றிய கருத்தரங்கில் ஆய்வாளர்கள் இதுகுறித்து பேசியுள்ளனர். தொடர்ந்து மாறிவரும் காலநிலை மாற்றத்தில் இது தடுக்க முடியாதது என்று ஆய்வாளர்களில் ஒருவரான ஆல்பேரி தெரிவித்துள்ளார். 

    தொடர்ந்து நோய்க்காரணிகளால் பிரச்சினைகளை சந்தித்து வரும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இது மேலும் ஒரு அச்சுறுத்தலாக அமையும் என்று பிரவுன் என்ற ஆய்வாளர் கூறியுள்ளார்.  

    கோடையில் ஏற்படும் உடல் உபாதைகள் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்…தவிர்த்துக் கொள்ளுங்கள்!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....