Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசூடுபிடிக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி : ஒரே பிரிவில் மோதும் முன்னாள் சாம்பியன்கள்

    சூடுபிடிக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி : ஒரே பிரிவில் மோதும் முன்னாள் சாம்பியன்கள்

    வெள்ளிக்கிழமை தோஹாவில் நடந்த போட்டியில் டிரா செய்ததன் மூலம் இந்த ஆண்டு  உலகக்கோப்பை போட்டிகளில் முன்னணி அணிகளான ஜெர்மனியும், ஸ்பெயினும் ஒரே பிரிவில் இடம் பிடித்தன. அதே நேரத்தில் புவிசார் போட்டியாளர்களான அமெரிக்காவும் ஈரானும் டிரா செய்தன. 

    நான்கு முறை உலகசாம்பியனான ஜெர்மனி அணி இந்த பாட் டூ பிரிவில் இருந்தது. முன்னணி போட்டியாளர்களுடன் போட்டிகளைத் தவிர்க்கவே இது ஏற்பாடாகி இருந்தது. காரணம் யாதெனில் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற போட்டியில் லீக் போட்டிகளிலேயே வெளியேறி இருந்தனர் ஜெர்மனி அணியினர்.  

    குரூப் E சுற்றில் தற்பொழுது ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் இணைந்துள்ளன. இதன் இறுதி பட்டியல் இந்த வருடம் ஜூன் மாதம் நடைபெறும் கோஸ்டாரிகா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியின் முடிவோடு நிறைவு பெறும். 

    இறுதியாக அமெரிக்காவும் ஈரானும் கடந்த 1998ஆம் ஆண்டு பிரான்சில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் நேருக்கு நேராக மோதியிருந்தனர். லியானில் நடந்த ஆட்டத்தில் ஈரான் அணி 2-1 என்ற கோல்கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியிருந்தது. 

    மற்றொரு முன்னணி அணியான இங்கிலாந்தும் குரூப்பில் இடம் பிடித்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில் ஈரான் அணியை உலகக்கோப்பை போட்டிகளின் முதல் நாளான நவம்பர் 21 அன்றே எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. 

    கரேத் சவுத்கேட்டின் அணி, கடந்த ஆண்டு நடந்த ரஷ்ய போட்டியின் அரையிறுதியாளர்கள் மற்றும் யூரோ-2020ன் இரண்டாம் இடம் பிடித்த அணிகள் தங்களது அண்டை நாடுகளான வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய பிளே-ஆஃப் சுற்றுகளில் கடைசி இடம் பிடித்த அணிகள் மோதிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதற்கான இறுதி முடிவுகள் இந்த ஜூன் மாதம் வெளியாகும். 

    தோஹாவில் இருந்து வடகிழக்கே 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்கோரில் உள்ள 60000 இருக்கைகள் கொண்ட அல் பேட் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தார் அணி, ஈகுவடார் அணியை எதிர்கொள்கிறது. 

    குரூப் ஏ பிரிவில் 2018ல் உலககோப்பைக்குத் திரும்பிய ஆப்பிரிக்க சாம்பியனான செனிகல் அணி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை சந்திக்கிறது. உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அதன் பரம போட்டியாளர்களான டென்மார்க் மற்றும் துனிசியாவுடன் குரூப் டியில் விளையாடுகிறது. 

    மற்ற பிரிவுகளில் மோதும் அணிகள் ஆஸ்திரேலியா, பெரு மற்றும் ஐக்கிய-அரபு நாடுகளின் வெற்றியாளர்களாக இருக்கும். 

    இந்த உலகக்கோப்பை கால்பந்து உலகின் ஜாம்பவான்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லயோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு இந்த உலகக்கோப்பை தொடரே இறுதியானதாக இருக்கும். எனவே அவர்களுக்கும் ரசிகர்களுக்கும் இது முக்கியமான தொடராக அமையும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....