Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ரஷ்யா மீது அடுத்தப் பொருளாதாரத் தடை : ரஷ்யாவை குறிவைக்கும் உலக நாடுகள் ?

    ரஷ்யா மீது அடுத்தப் பொருளாதாரத் தடை : ரஷ்யாவை குறிவைக்கும் உலக நாடுகள் ?

    உக்ரைன் மீது போர்த்தொடுத்து வரும் ரஷ்யாவைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்து வருகின்றன. இந்நிலையில் புதிய பொருளாதாரத் தடையை விதித்துள்ளது ஜி7 நாடுகள்.

    நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி போர் தொடுத்தது. ஒரு மாதங்களைக் கடந்து இன்னும் போர் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அந்நாட்டின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைபற்றிவரும் நிலையில் இதனால் அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதனைத்  தடுத்து நிறுத்த உலகநாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதாரத்தடை விதித்து வருகின்றன. சமீபத்தில் தான் நார்வே நாடு பொருளாதாரத்தடையை விதித்தது. 

    ரஷ்யாவின் முக்கிய பொருளாதார மூலமான கச்சா எண்ணெய் வணிகத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் உலக கச்சா எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணையின் அளவு பலமடங்கு உயர்ந்து இப்பொழுது தான் சிறிதளவு குறைந்துள்ளது. பொருளாதாரத் தடையினால் ரஷ்யா ரூபிளின் பணமதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. ரஷ்யாவின் மத்திய வங்கி 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு தங்கத்தின் இருப்பினை அதிகரித்து வந்தது. தற்பொழுது, அதனை விற்பனை செய்வதன் மூலம் பணமதிப்பிழப்பை கட்டுக்குள் கொண்டு வரலாம் என நினைத்துள்ளது. 

    கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி ரஷ்ய மத்திய வங்கி உள்நாட்டில் தங்கம் வாங்கப்படும் என அறிவித்து இருந்தது. தோராயமாக ஒரு கணிப்புப்படி இதன் மதிப்பு சுமார் 130 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதனை விற்பனை செய்து வீழ்ந்து வரும் ரஷ்ய பொருதாளாரத்தை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என ரஷ்யா உத்தி வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. 

    இந்நிலையில், மத்திய வங்கியின் பரிவர்த்தனைகளில் ரஷ்யாவின் தங்க பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துவதாக ஜி7 நாடுகள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் ஸ்டேட் டுமாவில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை நோக்கியும் புதிய சுற்றுத் தடைகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    இப்படித் தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை அறிவித்து வரும் இந்த ஜி7 அமைப்பில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.

    தொடர்ந்து உலக நாடுகள் ரஷ்யா நாட்டினை முடக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் அந்நாட்டிற்கு எதிரான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், ரஷ்யா இந்தியாவிற்கு வரலாற்று நண்பன் என்பதால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....