Tuesday, March 21, 2023
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகார்களில் செல்பவர்கள் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை - டெல்லி அரசு அறிவிப்பு!!!

    கார்களில் செல்பவர்கள் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை – டெல்லி அரசு அறிவிப்பு!!!

    இன்று முதல் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

    இந்தியா: கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தோம். இதன் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    corona

    அந்த வகையில் டெல்லியில் சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், டெல்லியில் வாடகை கார்கள் மற்றும் இதர வாடகை வாகனங்களில் பயணம் செய்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சொந்தக்காரர்கள் மற்றும் சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் தங்கள் வாகனங்களில் பயணம் செய்யும் போது முகக்கவசம் அணிய கட்டாயமில்லை என தெரிவித்துள்ளது. டெல்லி பேரழிவு மேலாண்மை ஆணையம் நடத்திய கூட்டத்தில் லெப்டினண்ட் கவர்னர் அனில் பைஜால் தலைமையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    mask

    பொது இடங்களில் முகக்கவசம் அணிவதற்கு விதிக்கப்பட்ட அபராதம் 2,000-யிருந்து 500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியாக பயணம் செய்யும் ஓட்டுனர்கள் மட்டும் முகக் கவசம் அணிய வேண்டாம் என அறிவித்துள்ளது.

    டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் இந்த தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் டெல்லியில் உள்ள பகுதிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...