Thursday, April 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடம்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

    உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடம்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

    உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகன் அகிலேஷ் யாதவிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். 

    உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி நிறுவனருமான முலாயம் சிங்க் யாதவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    தில்லி தேசிய தலைநகர் வலையப் பகுதியில் உள்ள குருகிராமில் செயல்பட்டு வரும் மேத்தாந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    பிறகு, அவரின் உடல்நிலை மிகவும் மோசமானதால், நேற்று அக்டோபர் 2 ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவருக்கு புற்றுநோய் மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இந்நிலையில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகன் அகிலேஷ் யாதவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். 

    அப்போது பிரதமர், மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயாராக இருப்பதாக அகிலேஷிடம் தெரிவித்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....