Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழ்நாட்டிற்கு விரைவில் கருணாநிதி நாடு என்று பெயரை மாற்றி வைத்துவிடுவார்கள்- ஜெயக்குமார் கருத்து

    தமிழ்நாட்டிற்கு விரைவில் கருணாநிதி நாடு என்று பெயரை மாற்றி வைத்துவிடுவார்கள்- ஜெயக்குமார் கருத்து

    திமுக அரசு பல்வேறு பொது இடங்களின் பெயர்களை மாற்றி வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாட்டிற்கு விரைவில் கருணாநிதி நாடு என்று பெயர் மாற்றிவிடுவார்கள் என்று விமர்சித்துள்ளார். 

    சொத்து வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை வேப்பேரி காவல் ஆணைய அலுவகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜெயக்குமார், சென்னை கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை மாற்றி வைத்துள்ளதை கொச்சைப்படுத்த விரும்பவில்லை என ஆரம்பித்தார். 

    பின் அவர், காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட தெரியும் ஈசிஆர் என்றாலே சென்னை கடற்கரை சாலைதான் என்றார். அந்த அளவுக்கு மிகவும் புகழ்பெற்ற சாலை அது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர், அந்தச் சாலையின் பெயரை மாற்றப்படுவதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள். விரைவில் தமிழ்நாட்டிற்கு கருணாநிதி நாடு என்று பெயர் மாற்றம் செய்துவிடுவார்கள் என்று விமர்ச்சனம் செய்தார். 

    மேலும் பேசிய அவர், அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் ஆளுங்கட்சி ஈடுபட்டுள்ளதாகவும், அதிமுக அவருக்கு என்ன செய்யக் கொடுத்தாலும் சிறப்பாக செய்வார் என்றும் கூறினார். அதிமுகவில் கட்சிக்கு கொடி கட்டுபவன் கூட முதல்வராக முடியும். ஆனால், திமுகவில் பொன்முடி, நேரு போன்றவர்கள் ஸ்டாலினுக்கு அடுத்து வர முடியுமா? இல்லை, அது போன்ற நிலைதான் அங்கு உள்ளதா? என கேள்விகளை எழுப்பி உள்ளார்.  

    திமுகவின் பல நிகழ்ச்சிகளில், உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்படுகிறார் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலினுடைய மருமகன் சபரீசன் மற்றும் அவருடைய மகன் உதயநிதி தான் நிழல் உலக முதல்வர்களாக இருக்கின்றார்கள் என்றும் இதனால், கனிமொழிக்கு எந்த வேலையும் இல்லாமல் இருப்பதாகவும் கூறினார். மேலும் ஜெயக்குமார்,  மகுடத்தை உதயநிதி ஸ்டாலினுக்கு தான் சூட்ட வேண்டும் என முதல்வர் நினைப்பதாக கூறினார். திமுகவில் பாட்டன், அப்பன், மகன் என்ற வாரிசு அரசியல் மட்டுமே நடப்பதாக அவர் கூறி முடித்தார். 

    நாட்டுக்கு ஒரு நல்ல செய்தி : குறைந்து வரும் கொரோனா பாதிப்பு 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....