Tuesday, March 19, 2024
மேலும்
    Homeவாழ்வியல்அழகுக் குறிப்புஉங்கள் கால்களைப் இப்படி அழகாக வைத்துக் கொள்ளுங்கள்!

    உங்கள் கால்களைப் இப்படி அழகாக வைத்துக் கொள்ளுங்கள்!

    பொதுவாக பெண்களுக்கும் ஆண்களுக்கும் பாத வெடிப்பு ஓய்வின்றி வேலை செய்வதால் ஏற்படுகிறது. பலர் அதில் கவனம் செலுத்துவதில்லை. காரணம் கேட்டால், நேரமின்மையைக் கூறுவார்கள், முகத்தை எப்படி அழகாக வைத்து கொள்கிறோமோ அப்படித் தான் பாதமும், உடலின் முழு எடையையும் சுமந்து தினந்தோறும் உழைக்கும் நம் கால்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தானே ஆக வேண்டும். ஒருவரின் கால்களை வைத்துத் தான் அவரின் சுகாதாரம் மற்றும் அவரின் பழக்கத்தை கணிப்பார்கள். ஆகையால்,

    அழகான பாதங்களுக்கு இங்கே பாருங்கள் சில குறிப்புகள், foot care

    • பாதங்களை வெளியே சென்று வந்ததும் கழுவ மறக்க வேண்டாம். குளிக்கும் போது காலுக்கும் சில நிமிடங்களை ஒதுக்கி நன்கு தேய்த்து கழுவி குளியுங்கள்.
    • வெறும் தண்ணீரில் கால்களைக் கழுவுவதைக்  காட்டிலும் அவ்வப்போது வெது வெதுப்பான நீரில் கழுவினால், பாத வலிகளும் மிருதுவாகவும் மாற உதவிச் செய்யும். ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கழுவினால் நல்ல மாறுதல்களைக் எதிர்பார்க்கலாம். nailpolish
    • கால்களின் விரல்களுக்கு இடையேயும், நகங்களுக்குள் புதைந்துள்ள அழுக்குகளை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.
    • நகங்களை சரியான இடைவெளியில் சமமாக வெட்டுதல் இன்னும் அழகைத் தரும்.
    • நகங்களுக்கு வண்ணம் தீட்ட நினைப்பவர்கள் சரியான மற்றும்  தரமான வண்ணங்களைக் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.
    • nail shaping வண்ணங்கள் வேண்டாம் என்பவர்கள் இயற்கை தந்த நம் நாட்டு மருதாணியை மிருதுவாய் அரைத்து விரல் நகங்களிலும் உள்ளங்காலிலும் வைத்துக் கொள்ளலாம். இது அழகுக்கு மட்டுமல்ல, உடல் குளிர்ச்சிக்கு ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது.
    • மிருதுவான கால்களுக்கு படிக்க கல்லை குதிகால் மற்றும் பாதங்களுக்கு  வாரம் இரண்டு அல்லது மூன்று முறை நன்கு தேய்த்து வந்தால், கடின தன்மை குறைந்து மென்மையாக மாறும், மேலும் இது பாதத்தின் இறந்த இரத்த செல்களை நீக்கி புதுப்பிக்கும்.
    • nail smootheningசிலருக்கு பாதத்தில் திட்டுத் திட்டாக கருமை படிந்திருக்கும், அவர்களுக்கு மாதம் இரண்டு அல்லது மூன்று முறையாது வெதுப்பான பாலில் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்து கழுவி வந்தால் மெல்ல மெல்ல திட்டுகள் மறைவதுடன், கால்களும் மென்மையாக மாறும்.
    • வறண்ட கால்கள் உடையவர்களுக்குத் தான் அதிக பாத வெடிப்பு ஏற்படும். ஆகையால் கால்களை வறண்ட விடக் கூடாது. இயற்கையில் கிடைக்கும் தாவர எண்ணெய் அல்லது தரமான ஈரப்பதங்களை ( moisturizer ) பயன்படுத்தலாம். இப்படி செய்வதால் கால்கள் அழகாகவும் பாத வெடிப்புகள் ஏற்படுவதையும் தடுக்கும்.

    foot care

    • உங்களை மேலும் அழகுப் படுத்துவது காலணிகள், பார்ப்பதற்கு அழாகாக இருக்கிறதே என்று பயன் படுத்தாதீர்கள், அது உங்கள் கால்களுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதையும் கவனித்து வாங்கிப் பயன்படுத்துங்கள்.
    • அவ்வப்போது கால்களுக்கு எண்ணெய் தேய்த்து உருவி அல்லது வருடிக் (மசாஜ்) கொடுத்து பாருங்கள், நீங்களே பலனைக் கண் கூடாக பார்ப்பீர்கள்.
    • மிகவும் முக்கியமான ஒன்று, உங்கள் கால்களுக்கு சற்றாவது ஓய்வு கொடுங்கள். அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக கடின தன்மையும் நீங்கும், உங்கள் கால்களுக்கு புத்துணர்வும் ஏற்படும்.

    foot care(சிலர் நைல் ஆர்ட் (nail art) என்ற பெயரில் ஏதேதோ புது வகை கோலங்களைக் கால்களிலும் கைகளிலும் வைத்துக் கொள்கின்றனர். மருதாணி என்ற பெயரில் தரமற்றதை வைத்துக் கொள்கின்றனர். அது எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? எதனால் செய்யப் பட்டது என்பதை எல்லாம் பார்ப்பதில்லை. பிறரைப் பார்த்தும் அது அழகாக இருக்கிறதே என்றும் நினைத்து மட்டும் பயன்படுத்துகிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளைக் சிறிதும் எண்ணி பார்ப்பதில்லை. எதுவாயினும் பார்த்து யோசித்த பின் வாங்கிப் பயன்படுத்துங்கள்)

    என்ன இப்பதிவு பயனுள்ளதாக இருந்ததா மக்களே?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....