Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகாஷ்மீரில் மீண்டும் பதற்றம் : தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்

    காஷ்மீரில் மீண்டும் பதற்றம் : தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் தீவிரவாத கும்பலுக்கும் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீவிரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கூறி 5 அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். அவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  

    இதற்கு காஷ்மீர் மாநிலமாக இருந்தபொழுது முதல்வராக இருந்த மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ஒருபுறம் காஷ்மீரில் குடிமக்களாக இந்திய ராணுவத்தில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்ற பாதுகாப்பு அதிகாரிகளை இந்திய அரசாங்கம் நியமனம் செய்து வருகிறது.

    அதே நேரத்தில் அவர்களை நிர்வாகத்தில் பணியமர்த்த காஷ்மீர் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது. இது முற்றிலும் காஷ்மீர் மக்களை அதிகாரத்தில் இருந்து வலுவிழக்கவே இவ்வாறு செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். 

    இந்த பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் ஒருவர் ஜம்மு காஷ்மீர் போலீஸ் கான்ஸ்டபிள் தவ்சீப் அகமது மிர் ஆவார். இவர் தன்னுடைய போலீஸ் சகாக்களில் இருவரை கடுமையாகத் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இவர் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் இணைந்து கடுமையான தீவிரவாத பயிற்சிகளில் ஈடுபட்டவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வழக்குகளை ஆராய்ந்து வெளியிட்ட குழு இந்த ஐந்து அரசு ஊழியர்களும் அரசாங்கத்தில் வேலை செய்து கொண்டே அடிமட்டத்தில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்துள்ளனர். 

    தவ்சீப்பின் தந்தை அல் ஜிஹாத் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர். அவர் 1997ஆம் ஆண்டு நடந்த ஒரு என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின் தவ்சீப் காவல்துறையில் இணைந்தார். அங்கிருந்தே மறைமுகமாக தீவிரவாத அமைப்பில் வேலைசெய்யத் தொடங்கினார். நாளடைவில் அவருக்கு பயங்கரவாத தளபதிகளின் நட்பு கிடைத்தது. கடந்த 2017ல் தன்னுடைய தீவிரவாத நண்பர்களுடன் இணைந்து ஒரு எஸ்.பி.ஓவைக் கொல்ல முயன்றார். 

    அதன்பின்பு ஷோபியானில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளைக் கொல்ல முயன்றார். இவ்விருவரும் பிழைத்துக் கொண்ட நிலையில் இப்பொழுது தவ்சீப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. 

    மற்ற அரசு ஊழியர்களான குலாம் ஹாசன், அர்சித் அகமது, சாதிக்கு ஹுசேன் ராதேர் மற்றும் சராபாத் அலி கான் ஆகியோர் தங்களுடைய பணிகளில் இருந்து கொண்டே பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு ரகசியமாக சட்ட விரோத செயல்களில் ஈடுபட உதவிய காரணங்களுக்காக பணி நீக்கம் செய்யப்படுவதாக இவர்களை பற்றி விசாரணை நடத்திய குழு கூறியுள்ளது.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....