Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவெங்காய விலை குறைப்பு: ஏற்றுமதி விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை!

    வெங்காய விலை குறைப்பு: ஏற்றுமதி விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை!

    வெங்காய மண்டியில் சின்ன வெங்காயத்தின் விலை பன்மடங்கு குறைப்பு ஏற்பட்டுள்ளது. வெங்காயத்திற்கான ஏற்றுமதி விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    காய்கறிகள் விலை ஏற்றம் போது பொது மக்களுக்கு எந்த அளவிற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறதோ, அந்த அளவிற்கு விலை குறையும் போது வியாபாரிகளுக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்துகிறது.

    onion

    கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பாக திருச்சி வெங்காய மண்டி மற்றும் காந்தி மார்கெட்டில் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் இன்று 25 ரூபாய்,20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை குறைப்புக்கு காரணம் வெங்காயத்தின் உற்பத்தி மற்றும் வரத்து அதிகரித்து வருவதே என கூறப்படுகிறது.

    onion rate reduction

    பெரிய வெங்காயம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாலும், சின்ன வெங்காயத்தின் விலை குறைப்பு திருச்சி வெங்காய மண்டியில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி வெங்காய மண்டி வியாபாரிகள் சங்கம் மற்றும் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் நல சங்கத்தினர், மத்திய அரசு வெங்காயத்திற்கான ஏற்றுமதி விலையை குறைத்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....