Friday, March 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிமின்துறை ஊழியர்கள் தொடர்ந்து போராடினால் 'எஸ்மா' சட்டம் பாயும்-தமிழிசை எச்சரிக்கை

    மின்துறை ஊழியர்கள் தொடர்ந்து போராடினால் ‘எஸ்மா’ சட்டம் பாயும்-தமிழிசை எச்சரிக்கை

    மக்கள் பாதிக்கப்படும் வகையில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினால், எஸ்மா சட்டம் பாயும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து, 5-வது நாளாக மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். 

    மரப்பாலம் துணை மின் நிலையத்திற்குள் நுழைந்து ஒப்பந்த ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அங்கிருந்த மின் சாதன பொருட்களை மின்துறை  ஊழியர்கள் சேதப்பபடுத்தினர். இதனால் மின்துறை ஊழியர்கள் 10 பேர் மீது முதலியார்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ‘அத்துமீறி துணை மின் நிலையங்களில் நுழைந்து மின்சாரத்தை துண்டித்தது விஷமத்தனமான செயல். இனி அரசு வேடிக்கை பார்க்காது. பொதுமக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினால், அவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும். போராட்டத்தை கைவிட்டு விட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க:இனி போன் வந்தால் ‘ஹலோ’க்கு பதில் ‘வந்தே மாதரம்’ சொல்லணும்! அரசு ஊழியர்களுக்கு உத்தரவு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....