Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பிரபல தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய எடப்பாடி : மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு போடப்படும்

    பிரபல தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய எடப்பாடி : மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு போடப்படும்

    48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்கு தொடரப்படும் என்றும் தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி. 

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் பல விதங்களில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் இதுதொடர்பான விவாதங்களும் வார்த்தைப்போர்களும் நடைபெற்று வருகின்றன. 

    சமீபத்தில் தான் தமிழக முதல்வர் அரசுமுறைப் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்றிருந்தார். அங்கு பல சந்திப்புகளும் கூட்டங்களும் நடத்தப்பட்டது. இந்த சந்திப்புகள் மூலம் தமிழகத்திற்கு நிறைய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் அவருடைய பயணம் குறித்த குற்றச்சாட்டுகளும் அவதூறுகளும் கிளம்ப ஆரம்பித்தன. 

    முதலமைச்சர் தனி விமானத்தில் குடும்ப சுற்றுலா சென்றுள்ளார், இதனால் அரசுப்பணம் தான் சீரழிகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. இப்படி அரசுப்பணத்தை தனிப்பட்ட காரியங்களுக்கு செலவிடுவது முறையா? என்று கேள்வியும் எழுப்பப்பட்டது. இந்நிலையில், இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்திருந்தார். 

    துபாய் பயணத்துக்கு செலவிடப்பட்ட பணம் திமுகவின் தனிப்பட்ட பணம் என்றும், தனி விமானத்தில் செல்ல அரசின் பணம் செலவிடப்படவில்லை என்றும் கூறியிருந்தார். மேலும், பொது விமானத்தில் பயணச்சீட்டு கிடைக்காததால் தான் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். 

    அதே நேரத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பாஜகவின் இளைஞர் அணிச்செயலாளர் அருள்பிரசாத் என்பவர் முதல்வரின் ஆடை குறித்து வதந்தியை கிளப்பி விட்டிருந்தார். அதாவது முதல்வர் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட்டின் விலை 17கோடி என்று கூறியிருந்தார். 

    இதனைக் கடிந்து போலீசிடம் புகார் அளித்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். உடனே அந்த பாஜக நிர்வாகி மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது. அதேபோல், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் இந்த துபாய் பயணத்தை விமர்சனம் செய்திருந்தார். 

    ஆனால் அதே நேரத்தில் எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது சென்ற அரசுமுறைப்பயணங்கள் குறித்து விவாதங்கள் எழுந்து வந்தன. மாலை முரசு என்னும் முன்னணி தொலைக்காட்சியில் இதுகுறித்த வாதங்கள் எழுப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் எடப்பாடி அரசுமுறைப்பயணமாக வெளிநாடுகள் சென்றபோது முதலீடு செய்ய பணம் எடுத்து சென்றாரா ? அவருடன் அவருடைய மகன் மற்றும் மாமனார் உடன் சென்றனரா ? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. 

    இதனால் அதிர்ச்சிக்குள்ளான எடப்பாடி தன்னை பற்றி அவதூறு கிளப்பிய அந்த தொலைக்காட்சி நிறுவனம் 48 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன்னுடைய அறிக்கையில் என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்ட நெறியாளர் செந்தில்வேல் மற்றும் மாலைமுரசு நிர்வாகம் 48 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும், தவறினால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். 

    இந்த திடீர் நோட்டீசால் தமிழக அரசியல் மற்றும் ஊடகக்களங்கள் பரபரப்பாகியுள்ளன.   

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....