இரஷ்ய அதிபர் புதினை சண்டைக்கு கூப்பிட்ட விவகாரத்தில், செசென் குடியரசின் தலைவர் ரம்சான் கெட்டிரோவ் எலன் மஸ்க்கை வம்புக்கு இழுக்க, தன்னுடைய பெயரான எலன் மஸ்க்கை இரஷ்ய போர்வீரரின் பெயரான எலோனா என மாற்றியுள்ளார் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலன் மஸ்க்.
நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து இரஷ்யா உக்ரைன் மீது போர்த்தொடுத்து வருகிறது. மூன்று வாரங்களைக் கடந்து இன்னும் போர் நடைபெற்று கொண்டே இருக்கிறது. இரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தும், வேறுசில நடவடிக்கைகளின் மூலமாகவும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உலகின் முன்னணி பணக்காரரும், தொழிலதிபருமான எலன் மஸ்க்கும் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைனில் இணையை சேவை பாதிக்கப்பட்டப்போது அந்நாட்டின் அமைச்சர் மைக்கேலோ பெடரோவ் கேட்டு கொண்டதன் பேரில், டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் உரிமையாளரான எலன் மஸ்க் தன்னுடைய ஸ்டார் லிங்க் சேவையை உக்ரைனுக்கு வழங்கினார். இவ்வாறு இரஷ்யாவுக்கு எதிரான தன்னுடைய எதிர்ப்பை வெளிகாட்டிக் கொண்டே வந்த எலன் மஸ்க் ட்விட்டரிலும் தன்னுடைய எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார். இரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை வம்புக்கு இழுத்த எலன் மஸ்க், இரஷ்யாவை ஒற்றைப்போருக்கு அழைத்துள்ளார். அந்த டுவிட்டில் இரஷ்யாவுக்கு ஒற்றைக்கு ஒற்றையாக மோத தைரியம் உள்ளதா என ஆங்கிலத்திலும், இரஷ்ய மொழியிலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பிறகு, செசென் குடியரசின் தலைவர் ரம்சான் கெட்டிரோவ் எலன் மஸ்க்கிற்கு டெலிக்ராம் செயலியின் மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் இரஷ்யாவை எதிர்க்கும் அளவுக்கு உங்களுக்கு வலிமை இல்லை என்றும் நீங்கள் இருவரும் வலிமையில் இருவேறு எல்லைகளில் உள்ளீர்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் அவரை பெண்மையில் எலோனா என குறிப்பிட்டுள்ள இவர் தன்னுடைய நாட்டிற்கு வந்து சண்டைப்பயிற்சி பழகிக்கொள்ளுமாறும் நக்கலாகச் செய்தி அனுப்பி உள்ளார்.
இதனை அப்படியே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள எலன் மஸ்க், தன்னுடைய ட்விட்டர் பெயரையும் எலோனா என மாற்றி அதே நக்கலுடன் பதிலளித்துள்ளார். தன்னுடைய பெயரை மாற்றியதன் மூலம் தன்னை பின்தொடரும் 70 மில்லியன் பேரையும் அவர் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.