Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ட்விட்டரில் சாதனை படைத்த எலான் மஸ்க்: வெளிவந்த தகவல்..

    ட்விட்டரில் சாதனை படைத்த எலான் மஸ்க்: வெளிவந்த தகவல்..

    உலகளவில் ட்விட்டர் பக்கத்தில் பின்தொடரப்படும் கணக்குகளில் எலான் மஸ்க் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    தற்போதையக் காலக்கட்டத்தில் சமூகவலைதளங்களின் பங்கு என்பது தொழிற்தளங்களிலுமே பிரதிபலிக்கிறது. அந்த வகையில் இயல்பாகவே உலகம் முழுவதும் ட்விட்டர் சமூக வலைதளத்தை பலர் உபயோகித்து வருகின்றனர். 

    இந்நிலையில், ட்விட்டரில் அதிகம் பின்தொடரப்படும் கணக்குகளில் எலான் மஸ்க் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னர் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கணக்கை அதிகமானோர் பின்பற்றினர். 

    ஆனால், தற்போது எலான் மஸ்க் ஒபாமாவை பின்னுக்கு தள்ளியுள்ளார். ட்விட்டர் தளத்தில் படு ஆக்டிவாக இயங்கி வருபவர் மஸ்க். பல தலைப்புகளில் மஸ்க் டவிட்டரில் பதிவுகளை போடுவார். சில சமயங்களில் மற்ற பயனர்களின் ட்வீட்களுக்கும் பதில் கொடுப்பார். அதன் காரணமாக தற்போது எலான் மஸ்க்கின் ட்விட்டர் பக்க கணக்கை சுமார் 13,30,98,701 பேர் பின்பற்றுகின்றனர்.

    அதேநேரம், ஒபாமா ட்விட்டர் பக்க கணக்கை சுமார் 13,30,41,441 பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் அவ்வபோது மட்டுமே ட்விட்டர் தளத்தை அவர் பயன்படுத்துவார். 

    மேலும், எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் தளத்தை வாங்கியதும், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும் எலான் மஸ்க் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

    13 ஆண்டு காலமாக தாயின் உடலை மம்மியாக மாற்றி பாதுகாத்த மகன்.. போலந்தில் அதிர்ச்சி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....