Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஎலக்ட்ரிக் பைக்குகளுக்கு தடையா - மத்திய அரசின் முடிவு இது தான்!

    எலக்ட்ரிக் பைக்குகளுக்கு தடையா – மத்திய அரசின் முடிவு இது தான்!

    நாடு முழுவதும் ஆங்காங்கே எலக்ட்ரிக் பைக்குகள் தீடீரென வெடித்து வரும் நிலையில், எலக்ட்ரிக் பைக்குகளுக்கு மத்திய அரசு, தற்போது தடை தடைவிதித்துள்ளது. 

    பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக, மக்கள் பலரின் கவனமானது  எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் கார்களின் பக்கம் திரும்பியுள்ளது. அதிக விலை உயர்வால் எலக்ட்ரிக் பைக்குகளை அதிகம் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த பைக்குகள் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி இயங்குவது நன்மையாக இருந்தாலும் தீடிரென வெடிப்பது, இப்போது மக்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    அதிக நேரம் பேட்டரிக்கு சார்ஜ் செய்வதால் தான் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது என்றும், வெயில் நேரத்தில் பைக்கின் பேட்டரிகள் சூடுதாங்காமல் வெடிக்கின்றன என்றும் மின் பொறியியல் படித்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு மின் சக்தியால் இயங்கும் இந்த வாகனங்களைப் பற்றி மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்று கருத்துக்களை தெரிவிக்கின்றனர். 

    ஒகினாவா மற்றும் ஓலா போன்ற நிறுவனங்கள் விற்பனை செய்த எலக்ட்ரிக் பைக்குகளை திரும்பப் பெறப் போவதாக அறிவித்தது. சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் பைக்குகள் திரும்பப் பெறவிருக்கின்றன. இதன்மூலம் எலக்ட்ரிக் பைக்குகளை சீரமைத்தும் அவற்றை மேன்மைப்படுத்தியும் மீண்டும் வாடிக்கையாளர்களிடம் வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தன. மேலும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில் மத்திய அரசு,  எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடிப்பதற்கான முக்கிய காரணங்களை கண்டறியும் வரை, புதிதாக எந்த எலக்ட்ரிக் பைக்குகளையும் சந்தையில் அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் வாகனங்களில் தீப்பற்றி  எரியும் பேட்டரிகள், வேறு ஏதேனும் வானங்களில் பயன்படுத்தப்பட்டால் அதையும் நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. 

    தரக் கட்டுப்பாடுகளை உறுதி செய்து அனுப்பாத தயாரிப்பு நிறுவனங்கள் மீது, கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரித்துள்ளார். 

    தமிழகம் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைக்காதது அநீதி – பிரதமர் மோடி பேச்சு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....