Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழகத்தில் சொத்துவரி உயர்வு : எடப்பாடி பழனிச்சாமி காட்டம்

    தமிழகத்தில் சொத்துவரி உயர்வு : எடப்பாடி பழனிச்சாமி காட்டம்

    சொத்துவரியை உயர்த்தி விட்டு மத்திய அரசின் மீது குற்றம் சாட்டி தப்பிக்க நினைப்பதாக தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 

    சமீபத்தில் தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டது. இதனை எதிர்த்து அதிமுக சார்பில் திருச்சியில் கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்ட மேடையில் ஆளுங்கட்சியை கண்டித்துப் பேசினார் எதிர்கட்சித் தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி. 

    சொத்துவரி உயர்வால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 1000 ரூபாய் கொடுத்து வாடகைக்கு இருந்து வந்த பொதுமக்கள் இனிமேல் 2500 ரூபாய் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் திமுகவுக்கு மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இப்படியாக மக்கள் விரோத போக்குகளில் அதிமுக செயல்படுவது நல்லதல்ல. அதிமுக ஆட்சியில் வீடுவரை உயர்த்தப்படவில்லை. சொத்து வரியை உயர்த்துங்கள் என்று எவ்விதத்திலும் மத்திய அரசு கூறவில்லை. வீணாக மத்திய அரசின் மீது குற்றம் சுமத்தி திமுக தப்பிக்க பார்க்கிறது. 

    இதன் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்வாக திறமையில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் 487வது எண்ணில் சொத்துவரியை உயர்த்தமாட்டாளோம் என்று கூறியுள்ளது. ஆனால், அதற்கு முரணாக தற்பொழுது செயல்படுவது கொஞ்சம் கூட சரியன்று. இவ்வாறாக மக்கள் எக்கேடு கேட்டு போனாலும் பரவாயில்லை என்று திமுக செயல்பட்டு வருகிறது. உடனடியாக சொத்துவரி உயர்வை திமுக திரும்ப பெற வேண்டும் என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி. 

    இதேபோல் சென்னையிலும் வரி உயர்வைக் கண்டித்து போராட்டங்கள் அதிமுகவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இதில் பேசிய ஓ.பி.எஸ், திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்துள்ளதாக குற்றம் சாட்டினார். தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கோவிட் தொற்று மற்றும் மக்களின் பொருளாதாரம் முடங்கி விட்ட காரணம் ஆகியவற்றைக் கூறி வீட்டுவரியை உயர்த்த மாட்டோம் என்று கூறியது திமுக. ஆனால், தற்பொழுது 150 சதவீதம் உயர்த்தி உள்ளனர். இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார் ஓ.பி.எஸ். 

    மேலும், கோவிட் 4வது அலை வரும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளதால் திமுக அரசு இந்த சொத்துவரி உயர்வு மக்களைக் கடுமையாக பாதிக்கும். அதிமுக ஆட்சியில் சொத்துவரி உயர்வை எதிர்த்து திமுக போராடியபோது அதனை ஏற்று நாங்கள் திரும்ப பெற்றோம். அதேபோல திமுகவும் திரும்பப் பெற வேண்டும் என ஓ.பி.எஸ் கூறினார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....