Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஅறிவியல்இதுதான் புவியின் மற்றொரு நுழைவு வாயிலா? திகைத்த மக்கள்!

    இதுதான் புவியின் மற்றொரு நுழைவு வாயிலா? திகைத்த மக்கள்!

    கூகுள் வரைபடத்தில் (google map) காணப்பட்ட ஒருபகுதி சமூகலைதளங்களில் காட்டுத்தீயாய் புகைப்பட வடிவில் பரவி பல சொல்லாடல்களையும், கணிப்புகளையும் பரபரவென நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. மர்மத்தீவு, பவளத்தீவு மற்றும் நீக்கப்பட்ட தீவு என்றெல்லாம் பல கருத்து கணிப்புகள் வதந்திகளாக தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருந்தது. ஏன் அந்த பகுதி இப்படி காட்சயளித்தது என்பதற்கான பதிலை தவிர்த்து பலவும் பலவாறு சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கபட்டு கொண்டிருக்கிறது.

    கூகுள் வரைபடத்தை பொறுத்த வரையில் புவியில் சில பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. அவை நீக்கப்பட்ட பின் காணும் வரைபடம்தான் நாம் காணுவது என்பது கூகுள் வரைபட பயனாளர்கள் பலரின் எண்ண ஓட்டங்கள். அப்படியான எண்ண ஓட்டமே அவர்களை இது தீவு என்றும், பவளத்தீவு என்றும் இன்னும் பிறவாகவும் எண்ண வைத்திருக்கும் என்ற கணிப்பும் உண்டு.
    ” கடவுள் தனது கிடாரை இசைக்க வைத்திருந்த உலோக தகடை தவறவிட்டுவிட்டார்” என கூறிதான் முதன் முதலில் இந்த புகைப்படத்தை வெளியிட்ட ரெட்டிட்(Reddit)  பயனர் இக்காட்சியை பதிவு செய்திருந்தார். இங்கிருந்துதான் அனைத்தும் ஆரம்பித்தது.

    பல கணிப்புகள் வதந்திகளாக நிலவிக்கொண்டிருக்க, மற்றொரு ரெட்டிட் பயனர் நம்பும்படியான ஒன்றை தெரிவித்திருக்கிறார். ” தீவை சுற்றியுள்ள நீல வண்ணம், நீல வண்ணப் பூச்சால் (blue paint) தீட்டப்பட்டது. இதன் நிமித்தமாகத்தான் வரைபடத்தில் பெருங்கடல்கள் ஒரே மாதிரியாக காட்சியளிக்கின்றன. செயற்கை கோள் வரைபடங்களில் அந்த நீல நிறத்தை, சில பகுதிகளில் அழிப்பதன் மூலம் அவை தீவுகளாக காட்சியளிக்க தொடங்கிவிடுகின்றன” என்பதுதான் அவர் தெரிவித்த கூற்று.

    மேலும் அவர் கூறியது யாதெனில், “சிலசமயங்களில் அவர்கள் மோசமான வேலைகளை செய்கிறார்கள். எனவேதான் செயற்கையான கடலின் நிறத்தையும், அலைகளையும், கடற்கரையையும், தீவையும் உள்நோக்கி நகர்வதாக நீங்கள் காண்கீறீர்கள். வடிவத்தை பொறுத்தமட்டில் எந்த வடிவத்திலும் இவை நிகழலாம். அதை நான் மறுக்கவில்லை” எனவும் கூறியிருக்கிறார்.

    இந்த காட்சியால் நிகழப்பட்ட பல சொல்லாடல்களில் கேளிக்கையான ஒன்று என்னவெனில் ‘இது மற்றொரு புவியின் நுழைவுவாயில்’ என வந்திருந்த பதில்தான்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....