Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஅறிவியல்காபி குடிப்பதனால் ஞாபக சக்தி கூடுமா?

    காபி குடிப்பதனால் ஞாபக சக்தி கூடுமா?

    ஆவி பறக்கும் காபி ஒரு கையிலும், சூடான செய்திகளைப் பகிர்ந்தளிக்கும் செய்தித்தாள் ஒரு கையிலுமாகக் காலை வேளையை ஆரம்பிப்பது பல காலங்களாக நம் மக்களிடையே வழக்கமாகி விட்டது. இன்றைய தலைமுறையினரும் செய்தித்தாளிற்கு பதிலாக கைபேசியை வைத்துக் கொண்டு காபி அருந்துகின்றனர். சிலரிடம் காபிக்கு பதில் தேனீர் கோப்பை இருக்கலாம் என்பதை தவிர, வேறு எந்த மாற்றமுமில்லை.  எப்படியானாலும் இந்த காலை பானத்தில் நாள் முழுவதும் நீடிக்க கூடிய ஊக்கத்தை வழங்கி, உற்சாகம் பெருகும் என்பதாக நம்புகின்றனர்.

     காபி குடிப்பதனால் ஞாபக சக்தி கூடும் என்று இன்றைய தலைமுறையும் நம்பத்தயாராக உள்ளனர். நினைவுத் திறனை அதிகரிக்கும் சக்தியும் காபிக்கு உண்டு என்பதே இப்போதைய கண்டுபிடிப்பு. அரிசோன பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் இவ்வாறு கண்டறியப்பட்டது. 

    காபியில் உள்ள கஃபின் என்ற வேதிப் பொருளானது அறுபத்தைந்து வயதிற்கு மேற்பட்ட  முதியவர்களுக்கு ஞாபக சக்தியை விருத்தி அடைய செய்யும். பொதுவாக வயதானவர்களுக்கு  மிக இயல்பாக ஞாபகமறதி ஏற்படும். இவர்கள் கஃபின் உட்கொள்ளும் போது, ஞாபசக்தியில் உண்டாகும் இந்த வேறுபாட்டை தடை செய்யும். மூளையின் கோசங்களை சோர்வடையச் செய்து நினைவுத் திறன் உற்பத்தியை உயர்த்திவிடும். ‘அல்ஷிமெர்ஸ்’ என்ற நோயைக் கூட காபி அருந்துவதால் தடுத்து நிறுத்த இயலும். இதனாலேயே நம் மூளையானது நாம்  சோர்வடையும் போதெல்லாம், காபி குடிக்க தூண்டுகின்றது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....