Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்வன்னியர்களுக்கான 10.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு ரத்து : மருத்துவர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்

    வன்னியர்களுக்கான 10.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு ரத்து : மருத்துவர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்

    வன்னியர்களுக்கான 10.5 % இடஒதுக்கீடு செல்லாது என அறிவித்த மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் தன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். 

    நாமின்றி சமூகநீதி இல்லை. நிச்சயம் வெல்வோம் களங்காதே ! என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே ! கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வன்னிய மக்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லாது என்ற உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு உங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம் ? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதற்கு ஆறுதல் கூறவும், உண்மையும் விளக்கவும் இந்த கடிதத்தை விளக்குகிறேன் என்று அந்த கடிதம் தொடங்குகிறது. 

    கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னிய மக்களுக்கான 10.5 % இடஒதுக்கீடு செல்லும் என்று வந்திருந்தால் நாம் மகிழ்ச்சியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்போம். ஆனால், தீர்ப்பு நமக்கு எதிராக வந்துள்ளதால் சோகத்தில் இருப்பிர்கள். இந்த தீர்ப்பால் மகிழ்ச்சியடைய ஒன்றும் இல்லாதது போல, இதனால் வருத்தப்படவும் ஒன்றும் இல்லை. 

    இதற்கு அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. எவ்வாறு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவில் சாதிக்கேற்றவாறு தனித்தனியாக வழங்கப்படுகிறதோ, அதைப்போலவே இதிலும் வழங்கலாம் போன்ற சான்றுகளை வழங்கியுள்ளோம். அவ்வாறெனில் எப்பொழுது வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு எப்பொழுது கிடைக்கும் ? என்ற கேள்வி என் காதுகளில் விழாமல் இல்லை 

    பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் வன்னிய மக்களைப் புறம் தள்ளிவிட்டு தமிழ்நாட்டில் சமூக நீதி பேச முடியாது. உரிய ஆதாரங்கள் இருந்தால் உள்இடஒதுக்கீடு சாத்தியம் என்று நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில் கொடுக்காமல் இருப்பது நியாயமற்றது. கடந்த வருடம் சென்னை உயர்நீதிமன்றம் வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக 7 காரணங்களைக்  கூறியது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    அவற்றை எதிர்த்து ஆதாரங்களுடன் பதில்களை வெளியிட்டேன். அதன்பிறகு சட்டப்போராட்டங்கள் பல நடத்தி உள்இடஒதுக்கீட்டுக்கு எதிரான 6 தடைகளை தகர்த்து எறிந்துளோம் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், தனது போராட்ட வாழ்க்கையைப் பற்றியும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதையை மேற்கோள்காட்டி எளிதாக கிடைக்க சமூகநீதி ஒன்றும் சுக்கு மிளகு இல்லை என்று கூறியுள்ளார். வயது முதிர்ந்து நான் கோலூன்றி நடந்தாலும் என் மக்களுக்காக போராடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். முத்து விழாவில் முதுமை என்னை எவ்வளவு வாட்டினாலும், கோலூன்றி நடந்தாலும் நான் என்னுடைய ஊமைச்சனங்களுக்காக  போராடி என் உயிரை விடுவேன் என்று பேசியதையும் நினைவு கூறியுள்ளார். 

    இந்நிலையில், இதுகுறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக ஆலோசனை கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது என்று பாமகவின் ஜி.கே.மணி குறிப்பிட்டுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....