Friday, March 24, 2023
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மீனவர்களை கைது செய்வது அத்துமீறலின் உச்சம் - டாக்டர் ராமதாஸ் கருத்து!

    மீனவர்களை கைது செய்வது அத்துமீறலின் உச்சம் – டாக்டர் ராமதாஸ் கருத்து!

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழகத்தின் நாகை மாவட்டத்தை சார்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டமைக்கு பல தர்ப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. 

    இந்நிலையில், ”வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 21 பேரை சிங்களை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது” என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

    tn fisherman

    கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட 55 மீனவர்கள் அண்மையில் தான் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் 43 பேரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் இன்னும் நாடு திரும்பமுடியவில்லை. அதற்குள் மேலும் 21 மீனவர்களை கைது செய்வது அத்துமீறலின் உச்சமாகும் எனவும் ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். 

    மேலும், இப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களையும் கொரோனா தாக்கும் ஆபத்து உள்ளது. அதனால், அவர்களை சிறையில் அடைக்காமல் விடுதலை செய்யவும், இலங்கையிடம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    weather

    தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நண்பகல் 12.45 மணிக்கு வெளியிட்டுள்ள...