Saturday, March 16, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்நள்ளிரவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா? ஆய்வு சொல்வது என்ன? 

    நள்ளிரவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா? ஆய்வு சொல்வது என்ன? 

    நள்ளிரவில் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    உடல் அதிகரிப்பும் சரி உடல் எடை குறைவும் சரி இரண்டுமே இந்தக் கால கட்டத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. அதிலும் எடை அதிகரிப்பு அல்லது உடற் பருமன் போன்றவை நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஏற்பட வழிவகை செய்கிறது. குறிப்பாக தூக்கமின்மை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் வர காரணமாகிறது. 

    இந்நிலையில் நள்ளிரவில் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. 

    இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை முன்னிட்டு பேருந்துகளில் முன்பதிவு 50 ஆயிரத்தை எட்டியது

    இதன்படி நள்ளிரவில் சாப்பிடுவது உடலின் ஆற்றலைக் குறைக்கிறது ; பசியை மேலும் தூண்டச் செய்கிறது; கொழுப்பு திசுக்களில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே உடல் எடை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

    தாமதமாக சாப்பிடுவது நமது உடலில் லெப்டின், கெர்லின் ஆகிய இரு ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதால், இது பசியைத் தூண்டி திசுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உடல் எடையை அதிகரிக்கிறது. 

    அதனால் இரவு நேரங்களில் தாமதமாகவோ அல்லது நள்ளிரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக நள்ளிரவில் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என ஆய்வாளர்கள் பரிந்துரை செய்கின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....