Saturday, March 16, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்உலக இதய தினம் - நம் இதய பாதுகாப்பிற்கு நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா...

    உலக இதய தினம் – நம் இதய பாதுகாப்பிற்கு நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா ?

    நாம் உடலில் உயிர் இருக்கும் இடமாக கருதப்படுவது இதயம் தான் ” ஆனால் எந்த அளவுக்கு அந்த இதயத்தை நாம் பாதுகாக்கிறோம் என்பது தான் கேள்வி குறி!

    இந்தியாவில் மாரடைப்புகள் ஏற்படும் 50 சதவீதம் ஆண்கள் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தான் . அதில் 25% சதவீதம் ஆண்கள் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்று இந்திய இதய கூட்டமைப்பு இயக்கம் தெரிவிக்கிறது. பல தரப்பட்ட இதய நோயால் இறக்கும் பெண்களின் விகிதமும் அதிகமாகவே உள்ளது என இந்த அமைப்பு கூறுகிறது. இந்தியாவில் மக்களின் இதய ஆரோக்கியம் இருக்கிறது என்றும், எப்படி நாம் நம் இதயத்தை பாதுகாத்து கொள்வது என்றும் இந்த தொகுப்பில் பார்க்கலாம் !

    இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில், மனிதன் நிற்கவே நேரமில்லாமல் ஓடுகிறான்.

    வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் துடிக்கும் நம்முடைய இதயத்தை, நாம் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும்.

    ஆராச்சியாளர்கள் இதயத்தின் பாதுகாப்பிற்கு மனிதன் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென பல கோட்பாடுகளை வகுத்துள்ளர்னர். அவை..

    ஆங்கிலத்தில் ‘6 இஸ்’ (6 Es) என்று கூறுவார்கள். Exercise, Eat healthy, Enough sleep, Exit addiction, Take care of emotional health, Evaluate numbers என்பார்கள்.

    இந்த ஆறு காரணிகளை சரியாக செய்தால் மட்டுமே போதும்…. மனிதன் ஆரோக்கியமாக வாழலாம்.

    தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, நம்முடைய மனத்தை மகிழ்ச்சியாக வைத்து கொள்வது, தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் உறங்குவது முக்கியம்.

    மது அருந்துததல், புகைப்பிடித்தல், அல்லது பாக்கெட்டில் வரும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவது போன்றவற்றை தவிர்க்கவேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில், உடலின் ரத்த அழுத்தம், எடை, சர்க்கரை அளவு ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும்.

    இரவில் பணி செய்பவர்களில் இதய துடிப்பு 20 முதல் 25 சதவீதம் சீராக இல்லை என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதே போல், ரத்த குழாய் அடைப்பு, மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான நோய்கள், பகலில் பணி செய்பவர்களை விட இரவில் வேலை செய்பவர்களுக்கு தான் அதிகம் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

    குறிப்பாக, பெண்களுக்கு இது போன்ற பிரச்னைகள் நிறைய ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, வெளிச்சம் இல்லாத அறையில் 8 மணி நேரம் வரை நன்றாக உறங்க வேண்டும்.

    அவர்கள் நேரம் கிடைக்கும்போது அல்லது வேலைக்கு செல்வதற்கு முன், உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

    மேலும் சில பணிகள் குறிப்பிட்ட நேர வரையறை இல்லாமல் இருக்கலாம். அவர்களும், முடிந்த அளவுக்கு, போதுமான தூக்கம், அரை மணி நேரம் உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு பழக்கம் ஆகியவற்றைப் பின்பற்றுவது இதய நோய்களில் இருந்து காக்கும்.

    சமீபத்தில் 40 வயதில் இருப்பவர்கள் இதய நோய்களுக்கு அதிகம் ஆளாகிறார்கள்.

    புகைப்பிடிப்பது இதய நோய்கள் ஏற்பட ஒரு முக்கிய காரணம். அடுத்து, இப்போது பலரும் உட்கார்ந்தே செய்யும் பணிகளில் இருக்கின்றனர். இதனால் உடல் இயங்க வாய்ப்பு குறைந்துவிடுகிறது.

    இந்த இரண்டையும் தவிர்த்தாலே, இதய நோயிலிருந்து பெரிதும் தப்பலாம்.

    மன அழுத்தத்திற்கும் இதய நோய்க்கும் தொடர்பு உண்டா? என்று கேட்டால்…

    கண்டிப்பாக சம்பந்தம் உண்டு. மன அழுத்தம் இருக்கும்போது, நமது உடலில் catecholamines அதிகம் சுரக்கும். இது இதய துடிப்பையும், ரத்த அழுத்ததையும் அதிகப்படுத்தும் வாய்ப்புள்ளது. இதுவும் இதய நோய்க்கு பெரும் விளைவாகும்.

    நம் மனத்தை அமைதியாக வைத்துக்கொள்ளப் பழக வேண்டும். நேர்மறையாக இருக்க கற்று கொள்வது, நண்பர்கள், குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது, அதிகம் சமூக ஊடகம் பயன்படுத்தாமல், அலை பேசியைப் பயன்படுத்தாமல் இருப்பது, யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் செய்வது என நம்மை நாமே அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    எனவே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ! என்பதை புரிந்து ஆரோக்கியமாக வாழ்வோம் !

    இதையும் படிங்க: 2030-ல் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும்? உலக இதய தின சிறப்பு பதிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....