Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்"மண்டை மேல இருக்க கொண்டைய மறந்துட்டிங்களே" - நெட்டிசன்களிடம் சிக்கிய திமுக!

    “மண்டை மேல இருக்க கொண்டைய மறந்துட்டிங்களே” – நெட்டிசன்களிடம் சிக்கிய திமுக!

    தமிழகத்தை ஆளும் திமுக அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்தது. தமிழகத்தின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்தார். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் ஆகும் .

    பட்ஜெட் தாக்கல் நிறைவடையும் முன்னவே அதிமுக அரசு வெளிநடப்பு செய்தது பெரும் பேசு பொருளாய் மாறியது. எடப்பாடி பழனிச்சாமி முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச முன்னெடுத்த போது அவற்றை சபாநாயகர் மு.அப்பாவு அனுமதி மறுத்தார். அனுமதி மறுத்ததற்கு காரணமாக பட்ஜெட் தாக்கலின் போது, வேறு எந்த விவகாரமும் பேச அனுமதி கிடையாது என்பதை சபாநயகர் தெரிவித்தார்.

    இப்படியாக அமளிகள், கருத்து வேறுபாடுகள், வெளிநடப்புகள், பேப்பர் இல்லாத பட்ஜெட் தாக்கல், திருக்குறள் கூறி ஆரம்பித்தது என பல நிகழ்வுகள் இன்று பட்ஜெட் தாக்கலின் போது அரங்கேறின.

    இந்நிகழ்வுகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, கடவுள் மறுப்பு கொள்கையை அவ்வபோது கையில் எடுக்கும் திமுக அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்தது குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று நீங்கள் யோசித்தீர்களானால் பதில் இதுதான்.

    இன்று இந்து மதத்தின் படி உகந்த நாள். பங்குனி உத்திரம் என்ற சிறப்பான நாள். மேலும் வெள்ளிக்கிழமை அதோடு பௌர்ணமி வேறு. இப்படியாக பல விடயங்கள் இருக்கும் இன்றைய நாளில் பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, மதச்சார்பற்ற கட்சி என்று பெருமை பேசும் திமுக பட்ஜெட் தாக்கல் செய்தது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

    ‘மண்டை மேல இருக்க கொண்டைய மறந்துட்டிங்களே’ எனவும் ‘இதுதான் அந்த பகுத்தறிவா, இது தெரியாம போச்சே’ எனவும், ‘கமல்ஹாசன் அமாவாசையில் கட்சி ஆரம்பித்தது குறித்து விமர்சனம் செய்த திமுகதானே இது’ என பலவாறு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் கடந்த சில மாதங்களாகவே இப்படியாக நெட்டிசன்கள் மத்தியில் அடிக்கடி மாட்டிக்கொள்கிறது, திமுக அரசு.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....