Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஏகே 62: விக்னேஷ் சிவன் செய்த செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

    ஏகே 62: விக்னேஷ் சிவன் செய்த செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

    ஏகே-62 திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் செய்துள்ள மாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    தென்னிந்திய நடிகர்களுள் மிக முக்கியமான ஒருவர், அஜித்குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த துணிவு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது.

    துணிவைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் 62-வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே-62’ என்றும் பெயரிடப்பட்டது. இதனால், விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவில் ‘ஏகே-62’ என்று அப்டேட் செய்தார். 

    இதைத்தொடர்ந்து, ஏகே-62 திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், இத்திரைப்படத்தில் சந்தானம், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. 

    ஆனால், திடீரென ஏகே-62 திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாக சினிமா வட்டாரங்கள் பேசிவருகின்றன. இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவில் ‘ஏகே-62’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததை நீக்கியுள்ளார். இதன் மூலம், விக்னேஷ் சிவன் ஏகே-62 திரைப்படத்தில் இருந்து விலகியுள்ளது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. விக்னேஷ் சிவன், ஏகே-62 திரைப்படத்திலிருந்து விலகியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    ak 62

    மேலும், ஏகே-62 திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஒரு பக்கம் கோட்டை மறுபக்கம் பேட்டை.. சுற்றுலாவுக்குப் போக நாமக்கலில் ஒரு இடம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....