Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்எந்தெந்த மண்ணில் என்னென்ன பயிர்கள் விளையும் என்று தெரியுமா?

    எந்தெந்த மண்ணில் என்னென்ன பயிர்கள் விளையும் என்று தெரியுமா?

    பொதுவாக இயற்கை விவசாயத்தில் பயிர் சாகுபடி என்பது விளைநிலத்துக்கு ஏற்ற வகையிலேயே இருக்கும். இயற்கை விவசாயத்தை கடைப் பிடிப்போருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் எந்தெந்த மண்ணில் எந்தெந்த பயிர்கள் விளையும் என. புதிதாக பயிர் வைக்கத் தொடங்கும் விவசாயிகளுக்கும் வீட்டில் மாடித் தோட்டம் அமைக்க திட்டமிட்டிருப்பவர்களுக்கும் இந்த பதிவு, மிகவும் உபயோகமாக இருக்கும். வாருங்கள் தெரிந்துக் கொள்வோம். 

    மண் வகைமையை பொறுத்து, வண்டல் மண், கரிசல் மண், செம்மண், சரளை மண், பாலை மண் என ஐந்து நில மண் வகைகளை நம் முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். 

    வண்டல் மண்: 

    வண்டல் மண்ணானது மெல்லிய துகளாக இருக்கும், இந்த மண்ணில் கம்பு, சோளம், கேழ்வரகு, கரும்பு, நெல், மிளகாய், பருத்தி, சணல், வாழை, மஞ்சள் போன்ற பயிர்கள் நன்றாக வளரும். 

    கரிசல் மண்: 

    எரிமலை குழம்பிலிருந்து வந்த படித்ததால் ஏற்பட்டது கரிசல் மண். இந்த மண்ணில் பருத்தி, தினை வகைகள், நெல், வாழை, கரும்பு, கிழங்கு வகைகள் போன்ற பயிர்களை விளைவிக்கலாம். 

    செம்மண்: 

    இந்த மண் வகை சிவப்பு நிறமாக இருப்பதால் செம்மண் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்ணில் சோளம், கரும்பு, பருத்தி, அரிசி, பருப்பு, மற்றும் பழ வகைகளும் நன்றாக வளரும். 

    சரளை மண்: 

    சரளை மண் மலைப் பிரதேசங்களில் காணப்படுகின்றது. இந்த மண்ணை துருக்கள் மண் என்றும் அழைப்பர். இந்த மண்ணில் பூக்கள், வேர்க்கடலை, நெல், கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற திணைவகை பயிர்கள் நன்றாக வளரக் கூடியவை. 

    பாலை மண்:

    இந்திய கடற்கரை ஓரங்களிலும் பாலைவனங்களிலும் காணப்படும் இந்த மண் வகையில் பயிர்கள் வளராது. உப்பு, கருவாடு போன்றவற்றை உலர்த்த மட்டுமே இவ்வகை மண் பயன்படும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....