Monday, March 27, 2023
மேலும்
    Homeவாழ்வியல்கோடைக் காலத்திற்கான வாழ்க்கை முறைகள் என்னவென்று தெரிந்துக் கொள்ளுங்கள்!

    கோடைக் காலத்திற்கான வாழ்க்கை முறைகள் என்னவென்று தெரிந்துக் கொள்ளுங்கள்!

    வெயில் கொளுத்தும் கோடைக் காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றித் தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

    • கோடையில் அதிகமா வியர்வைத் தண்ணீர் வெளியேறுவதால் நாம் குடிக்கும் நீரின் அளவை அதிகப் படுத்த வேண்டும்.
    • குடிக்கும் நீர் அதிகம் எடுக்க பிடிக்கவில்லை என்றால் நீங்கள் விரும்பும் பழம் காய்கறிகள் மூலம் எடுத்துக் கொள்ளலாம். இது உடலில் நீரின் அளவை சமமாக வைத்துக் கொள்ள உதவும்.
    • நாம் சாப்பிடும் உணவு முறையை சற்று கோடைக்காலத்துக்கு ஏற்றார்ப் போல் மாற்ற வேண்டும். காரம் புளிப்பு அதிகம் சேர்க்காமல் உணவை சமைத்து சாப்பிடுவது நல்லது. உணவில் அதிகம் காரம் சேர்த்தால் சிறுநீர்க்கடுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆதலால் அதைத் தவிர்ப்பது நல்லது. 
    • கோடைக் காலத்தில் வரும் பழங்கள் மற்றும் காய் வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் அதுவே மிகவும் போதுமானதாகவும் ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக, தர்பூசணி, நாவற் பழம், மாம்பழம், பலா பழம், முள்ளங்கி, கேரட், கோஸ் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்களை உண்ணுவது அவசியம்.
    • முக்கியமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒன்று கீரை வகைகள். கீரையில் பொதுவாகவே நீர்ச்சத்து, நார்ச்சத்து, இரும்புச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. 
    • சரி உணவு வகைகள் முடிந்தது அடுத்தது என்ன என்றுக் கேட்டால், அடுத்தது நாம் உடுத்தும் ஆடைகளுக்கு வருவோம்.
    • நாம் சாதரண நாட்களில் உடுத்தும் ஆடைகளைக் கோடைக் காலங்களில் உடுத்தக் கூடாது. குறிப்பாக பருத்தி ஆடையைத் தவிர வேறு எந்த ஆடையை  உடுத்தினாலும் கோடைக் காலத்தில் வியர்வையின் காரணமாக உடம்பில் பரவலாக எரிச்சல் ஏற்படும். 
    • எரிச்சல் வியர்வைக் காரணமாக சிலருக்கு சிலத் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதைத் தவிர்க்க இரண்டு வேளைக் குளியல் உடம்புக்கு புத்துணர்வைத் தரும். மேலும் சீரான இடைவெளியில் முகம் மற்றும் கைக் கால்களை கழுவி வருவது புத்துணர்வைத் தரும். 
    • வெளியில் சென்று வந்ததும் ஃபேன் அடையில் அமர்வதை விட சாதாரண குளிர்ந்த தண்ணீரில் முகம் கழு பிறகு அமர்வது நல்லது. காரணம் வியர்வை நாற்றமும் உடல் உஷ்ணமும் அப்படியே இருக்கும். 
    • முக்கியமான ஒன்று குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தண்ணீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் பொருள்கள் அனைத்துமே சாதரண நாட்களிலேயே ஆபத்தை உண்டாக்கும்.  
    • வியர்க்கிறதே என்று ஏதோ புதுவித முகப் பூச்சுகளை முகத்திலும் உடம்பிலும் பூச வேண்டாம். 
    • கோடைக் காலத்தில் ஏதேனும் உடம்பில் பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    yuvaraj

    சூர்யகுமார் யாதவ் மீது எழும் விமர்சனங்கள்; ஆதரவு தந்த யுவராஜ் சிங்

    ஆஸ்திரேலியாக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை டக் அவுட் ஆன இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி...