Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கையில் 3ஜி சேவையை நிறுத்த முடிவு?

    இலங்கையில் 3ஜி சேவையை நிறுத்த முடிவு?

    இலங்கையில் டயலாக் தொலைபேசி 3ஜி இணைய சேவையை அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இலங்கையில், அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் தொலைபேசி சேவையாக டயலாக் உள்ளது. இந்நிலையில், 4 ஜி இணைய சேவையை அதிகரிக்கும் நோக்குடன் அந்நிறுவனத்தின் 3 ஜி சேவை நிறுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சேவை வருகிற புது வருடம் 2023-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே நிறுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. 

    இந்தத் தீர்மானம் வாடிக்கையாளகர்ளுக்கு சிறந்த 4 ஜி சேவையை வழங்கும் நோக்கிலேயே எடுக்கப்பட்டிருப்பதாக டயலாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    அடுத்த தலைமுறைக்கு தொழில்நுட்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், டயலாக் 3 ஜி இணைய சேவையை ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாடிக்கையாளர்களே இப்போது பயன்படுத்தி வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 3 ஜி சேவையை நிறுத்தி அதற்கு பதிலாக 4 ஜி சேவையை உயர் தொழிநுட்பத்தில் வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதே சமயம், 3 ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை 4 ஜி சேவைக்கு மாற்றுமாறும் அந்நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. 

    வினாடிக்கு 250 கனஅடி நீரை பெரும் செம்பரம்பாக்கம் ஏரி.. திறக்கப்பட்ட பூண்டி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....