Friday, March 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தனுஷின் அதிக வசூல் படமாக மாறியதா வாத்தி? - வெளிவந்த தகவல்..

    தனுஷின் அதிக வசூல் படமாக மாறியதா வாத்தி? – வெளிவந்த தகவல்..

    தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் 118 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளிவந்த படம்தான், வாத்தி. இத்திரைப்படத்தில், சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்திருந்தார். மேலும், இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். 

    தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகி வெளிவந்த இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வாத்தி திரைப்படம் தற்போது 100 கோடி வசூலை எட்டியுள்ளது. இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

    இந்நிலையில், வாத்தி திரைப்படம் 118 கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் 41.05 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில், அதற்கும் மேலாகவே தெலுங்கில் 41.75 கோடி ரூபாய் ‘வாத்தி’ திரைப்படம் வசூலித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 8 கோடி ரூபாயும், உலக அளவில் 24 கோடி ரூபாயும் ‘வாத்தி” படம் வசூலித்துள்ளது.

    ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை அடுத்து ‘வாத்தி’ திரைப்படம் தனுஷ் கேரியரில் அதிக வசூலை ஈட்டியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சமீபத்தில் வாத்தி படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியன்-2 படப்பிடிப்பு இந்த நாட்டிலா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....