Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குடிரைலர்'முடிஞ்சா என்ன நிறுத்து' தனுஷ் கூற, வெளிவந்திருக்கும் மாறன் ட்ரைலரை குறித்த பார்வை!

    ‘முடிஞ்சா என்ன நிறுத்து’ தனுஷ் கூற, வெளிவந்திருக்கும் மாறன் ட்ரைலரை குறித்த பார்வை!

    துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், மாறன். தனுஷ் அவர்களின் மாறன் திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே இரு பாடல்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது மாறன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளிவந்துள்ளது.

    MAARANமாறன் திரைப்படத்தில் இருந்து ட்ரைலர் வெளிவந்த நிகழ்வே சற்று தனித்துவமாகத்தான் இருந்தது. ஆம்! மாறன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் மாறன் ட்ரைலர் சார்ந்த பதிவொன்றை பதிவிட்டது. பின்பு அப்பதிவை பகிரவும், அப்பதிவுக்கு விருப்பங்கள் அளிக்கவும் கோரப்பட்டிருந்தது . அதன் படி 100 விழுக்காடு நிறைந்தால் மாறன் ட்ரைலரை வெளியிடுவதாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அறிவித்தது. 100 விழுக்காடு நிறையவே மாறன் ட்ரைலர் வெளியானது.

    “இரண்டு நிமிடங்கள் ஒன்பது வினாடிகள் நீளத்தை கொண்ட மாறன் திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்த வண்ணம் உள்ளது. புலனாய்வு பத்திரிக்கை நிருபராக தனுஷ் அவர்கள் இருக்க, நேர்மையின் காரணமாக பல பத்திரிக்கை நிறுவனங்களில் தனுஷ் அவர்களின் வேலை பறிப்போகிறது. அதன் பின்பும் பத்திரிக்கை நிருபராக தனுஷ் பணியாற்றுகிறார். 

    இதற்கிடையில் தனுஷ் அவர்களின் தங்கை கதாபாத்திரத்திற்கு ஏதோ இன்னல் நேர்வதை போல் தெரிகிறது. அந்த இன்னலுக்கு பின் தனுஷ் அவர்கள் மதுவிலேயே திளைத்த பத்திரிக்கையாளராக கொண்டிருக்க, அவர் மீண்டும் புலனாய்வு செய்யும்படி நிகழ்வு ஒன்று அரங்கேறுகிறது.” இவைதான் மாறன் திரைப்பட  ட்ரைலரில் தெரியும் கதையாய்  இருக்கிறது.

    MAARAN

    தனுஷ் அவர்கள் ஸ்டைலிஷாகவும், மதுவில் திளைத்து இருப்பவராகவும் இருவேறு பரிணாமங்களிலும் நம்மை நம்ப வைக்கிறார். மாறன் திரைப்படத்தின் கதநாயகியாக வரும் மாளவிகா மோகனன் தனுஷின் மீது காதல் கொள்வதும், பத்திரிக்கை நிறுவனத்தில் தனுஷுடன் இணைந்து பணியாற்றுவதுமாய் இருக்கிறார். ட்ரைலரை பொறுத்த வரை மாளவிகா மோகனன் காதலிலும், இன்னல்களிலும் காட்டப்படுகிறார். சமுத்திரக்கனி வில்லனாக மிரட்ட வருகிறார். 

    திரைப்படத்தில் எமோஷனல் சார்ந்து தனுஷ் கதாப்பாத்திரமும், ஸ்ம்ருதி வெங்கட் கதாப்பாத்திரமும், அண்ணன் தங்கையாக நம்மை கவர்வார்கள் என்றே தோன்றுகிறது. ட்ரைலரில் இடம்பெற்ற அத்தனை வசனங்களும் அனல் பறக்கிறது அதே சமயம் எந்த வசனமும் மிகைப்படுத்தப் பட்டிருப்பதாக தோன்றவே இல்லை. 

    MAARAN

    ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களின் இசையில் பின்னணி இசை நன்றாகவே வந்திருப்பதாக மாறன் திரைப்படத்தின் ட்ரைலர் தெரிவிக்கிறது.

    ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ திரைப்படத்தின் சாயல் அற்றே, மாறன் திரைப்படம் இருக்கும் என்ற நம்பகத்தன்மை இருக்கிறது. அனைவரும் பார்க்க கூடிய வெகுஜன திரைப்படமாகவே மாறன் இருக்கும் என்றே ட்ரைலர் தெரிவிக்கிறது. 

    வருகின்ற மார்ச் மாதம் பதினோறாம் தேதி மாறன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

    மாறன் ட்ரைலர்; 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....