Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுயுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் : காலிறுதிப்போட்டியில் மோதும் அணிகள் எவையெவை?

    யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் : காலிறுதிப்போட்டியில் மோதும் அணிகள் எவையெவை?

    யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் காலிறுதி போட்டிகளில் மோதும் அணிகளைப் பற்றி பார்க்கலாம். 

    யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் தொடரின் 67வது சீசன் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு அஸோஸியேஷனால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த  அஸோஸியேஷனில் உறுப்பினாரக உள்ள நாடுகள் இந்த தொடரில் பங்கேற்கும். அந்த வகையில் இந்த சீசனில் 80 அணிகள் பங்கேற்றன. இதில் தகுதிசுற்றில் வெற்றி பெற்ற அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. வெற்றிகளின் அடிப்படையில் அணிகள் காலிறுதி போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படும். 

    காலிறுதிப் போட்டிகளைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் நடைபெறும். போட்டிகளின் முடிவில் வெற்றி பெரும் அணி அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறும். 

    இதில் காலிறுதியின் முதல் ஆட்டத்தில் பென்பிகா அணியும், லிவர்பூல் அணியும் ஏப்ரல் 6ஆம் தேதி மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியும் அட்லெட்டிக்கோ மாட்ரிட் அணியும் மோதுகின்றன. 

    லிவர்பூல் அணி தன்னுடைய கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று நல்ல பார்மில் உள்ளது. எனவே அதே ஆட்டத்தை இந்த முறையும் வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

    மற்ற இரண்டு ஆட்டங்கள் அடுத்த நாளான ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற இருக்கின்றன. இதில் முதல் ஆட்டத்தில் வில்லாரெல் அணியும், பேயர்ன் முனிச் அணியும் மோதுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் செல்சியா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் மோதுகின்றன. 

    இதில் முதல் ஆட்டத்தில் பேயர்ன் முனிச்சை பொறுத்தவரை தன்னுடைய கடைசி 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று கடும் வலுவான அணியாக திகழ்கிறது. எனவே இந்த முறை வில்லாரெல் அணி, பேயர்ன் முனிச்சை வெற்றி கொள்வது அவ்வளவு எளிதாக இருக்காது. 

    ரியல் மாட்ரிட் அணியோ தன்னுடைய கடைசி 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று பார்முக்கு திரும்பியுள்ளது. அந்த அணியின் கரீம் பெனிசீமா அட்டகாசமான பார்மில் உள்ளார். பிஎஸ்ஜி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து தன்னுடைய அற்புதமான திறமையை வெளிப்படுத்தினார். எனவே செல்சியா அணிக்கும் இந்த ஆட்டம் கடுமையாக இருக்கும். 

    இந்த அணிகளுக்கான காலிறுதி போட்டியின் இரண்டாவது ஆட்டமானது முறையே ஏப்ரல் 13 மற்றும் ஏப்ரல் 14 தேதிகளில் நடைபெறும். பிபா உலகக்கோப்பை 2022 வரும் நவம்பரில் தொடங்கி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிகள் வீரர்களுக்கு தங்களது திறனை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....