Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஊழல் ஒழிப்புத் துறை கூறியது உண்மைதானா? சிக்கியது என்ன?

    ஊழல் ஒழிப்புத் துறை கூறியது உண்மைதானா? சிக்கியது என்ன?

    முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டிலும் அவர் சம்பந்தப்பட்ட பல இடங்களில் இரண்டாவது முறையாக ஊழல் ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டது. தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களிலும் கேரளாவில் ஒரு இடத்திலும் என 58 இடங்களில் சோதனைகள் போடப்பட்டன.

    நேற்று நடந்த சோதனையின் முடிவில் இதுவரை 11.153 கிலோ கிராம் தங்கம், 119 கிலோ வெள்ளி மற்றும் கணக்கில் காட்டப்படாத ரூ.84 லட்சம் முதலியவை கைப்பற்றப்பட்டுள்ளன என்பதை ஊழல் ஒழிப்புத்துறை அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.  

    மேலும் 34 லட்சத்தை பலவகையான கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக ஊழல் ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் செல்போன்கள், மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்க்குகள், வங்கிப் பெட்டக சாவிகள் போன்றவையும் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது. it raid

    ஊழல் ஒழிப்புத் துறை இவ்வாறு தெரிவித்த நிலையில் தனது வீட்டில் எஸ்.பி வேலுமணி அளித்த பேட்டியில் இந்த சோதனைக்கு முழுக்க காரணம் ஸ்டாலின் மற்றும் திமுக தான் என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் இவ்வாறு செய்கின்றனர் என்று குறிப்பிட்டார். மேலும் இவர், என் வீட்டில் எந்தவித ஆவணங்கள் மற்றும் பண நகைகள் சிக்கவில்லை என்றும் கூறினார்.

    ஊழல் ஒழிப்புத் துறை கூறியது உண்மைதானா? இல்லை எஸ்.பி வேலுமணி பொய்யான பேட்டி அளித்தாரா போன்ற குழப்பங்கள் மக்களிடையே நிலவி வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....