Sunday, March 17, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைஇவை பழங்களா? பண மூட்டைகளா? உலகின் விலை உயர்ந்த கனிகள் குறித்த ருசிகர தகவல்...

    இவை பழங்களா? பண மூட்டைகளா? உலகின் விலை உயர்ந்த கனிகள் குறித்த ருசிகர தகவல்…

    பொதுவாக பழங்கள் என்பது மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் விலங்குகளுக்கும் பிடித்தமான ஒன்று. அதன் சுவைகளை ருசித்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றே சொல்லலாம் !

    நம் அன்றாட வாழ்க்கையில் வாங்கி ருசிக்கும் பழங்கள் பல… ஆனால் இந்த காலகட்டத்தில் தங்கத்தை விட விலை அதிகம் உள்ள பழங்களும் இதே உலகில் விற்கப்பட்டுதான் வருகிறது. அப்படிப்பட்ட தனித்துவம் மிக்க சில பழங்களை பற்றியும் அவை ஏன் பல லட்சங்களுக்கு விற்கப்படுகிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க !

    1) டென்சுக் தர்பூசணி (Densuke Watermelon)

    Watermelon sells for nearly $3,000 in Japan | India.com

     

    கோடை காலங்களை தர்பூசணிகள் இல்லாத பருவமாக கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. மக்கள் மத்தியில் தர்பூசணி பழம் அதிகம் சுவைக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட இந்த தர்பூசணியை நான்கு லட்சம் கொடுத்து வாங்க சொன்னால் வாங்குவீர்களா ?

    ஆம்…, உலகின் விலையுயர்ந்த டென்சுக் தர்பூசணி எனப்படும் அரியவகை பழம் ஜப்பான் நாட்டிலுள்ள ஹாக்கைட் தீவில் மட்டுமே வளர்க்கப்படுகிறது. இந்த அரியவகை தர்பூசணிகள் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 11 கிலோ எடையுள்ளதாக காணப்படுகிறது. இதன் சுவை மிக தனித்துவமான இனிப்பு சுவை கொண்டதாக இருக்கும். சாதாரணமாக பழங்களை சந்தைகளில் வாங்குவது போல இந்த தர்பூசணியை வாங்க முடியாது. ஏனென்றால், இது ஜப்பானில் ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. ஏலத்தின் ஒரு பழத்திற்கு 6000 டாலர் அதாவது இந்திய மத்திப்பில் சுமார் 4 லச்சத்துக்கு விற்கப்படுகின்றன இந்த அரியவகை தர்பூசனி பழம்.

    2) ஹெலிகன் அன்னாசிப்பழம் (Heligan Pineapples)

    இந்த அரியவகை அன்னாசிப்பழங்கள் இங்கிலாந்தில் உள்ள ஹெலிகன் பழத்தோட்டத்தில் மட்டுமே வளர்க்க முடியும். இந்த பழங்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    United Kingdom-மின் மிகவும் பிரபலமான தாவரவியல் தளம் ஹெலிகனின் லாஸ்ட் கார்டன்ஸ் ஆகும். இங்கிலாந்தில் அன்னாசி சாகுபடி மிகவும் பொதுவானதல்ல, கண்டம் முழுவதும் அவற்றைக் கண்டுபிடிக்கும் ஒரே இடம் இந்த தோட்டம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    3) யூபரி கிங் முலாம்பழம் (Yubari King Melon)

    உலகின் மிக விலையுர்ந்த பழங்களின் வரிசையில் முதலில் இருப்பது யூபரி கிங் முலாம்பழம் என்பதே. ஜப்பானைச் சேர்ந்த யூப்ரி முலாம்பழம் உலகின் மிக விலையுயர்ந்த பழமாகும். இந்த முலாம்பழங்கள் குறிப்பாக ஜப்பானின் யூபரி பிரதேசத்தில் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு யூபரி முலாம்பழங்கள் 2019 ஆம் ஆண்டில் 45,000 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 33 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு, உலகின் விலையுயர்ந்த பழமென சாதனை படைத்தது.

    4) கனசதுர வடிவ தர்பூசணி (Cubed watermelon)

    ஜப்பானியர்கள் பொதுவாக அசாதாரணமானவற்றை அதிகம் விரும்புவார்கள்.அவர்களின் தனித்துவத்தில் சிறந்தவை நிறம், வடிவம் மற்றும் சுவை போன்றவற்றில் வித்தியாசமாக இருப்பதே.

    ஜப்பானியர்களின் தனித்துவத்தில் ஒன்று தான் கனசதுர வடிவ தர்பூசணி அதாவது Cubed watermelon’. இவை சாதாரண தர்பூசணிகளை போன்று உருளையாக வட்ட வடிவத்தில் இருப்பதில்லை. மாறாக கனசதுர வடிவத்தில் வடிவமைத்து பயிரிட்டு வளர்க்கின்றனர்.

    ஆனால் க்யூப் அல்லது சதுர தர்பூசணிகள் உலகின் விலையுயர்ந்த பழங்களில் ஒன்றாகும். ஒரு தர்பூசணியின் சராசரி எடை 5 கிலோ. அதாவது, இந்திய பணமதிப்பில் ஒரு கிலோ தர்பூசணி சுமார் ரூ.12,000க்கு விற்கப்படுகிறது. எனவே ஒரு பழத்தை நாம் வாங்க வேண்டுமென்றால், சுமார்.. 70,000 நாம் செலவிட வேண்டும். இந்த தர்பூசணிகள் சதுர பெட்டிகளுக்குள் அடைத்து வளர்க்கப்படுவதால் அதன் தனித்துவமான வடிவத்தைப் நம்மால் பார்க்கமுடிகிறது.

    5) புத்த வடிவ பேரிக்காய்(Buddha Shaped Pear)

    அடுத்து வரிசையில் இருப்பது மிகவும் சுவாரசியமான அரியவகை பழம், அந்த பழம் ஒரு பேரிக்காய் என்றால் நம்ப முடிகிறதா ? ஆம்… சீன நாட்டின் தனித்துவம் மிக்க ஒரு பழம் தான் இந்த புத்த வடிவ பேரிக்காய். இந்த பேரிக்காய் உலக அளவில் மிக புகழ்பெற்றது. இதன் ஒரு பழம் கிட்டத்தட்ட 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    சில அறிக்கைகளின்படி, புத்தர் சிலை வடிவ பேரிக்காய்களை பயிரிடுவதற்கான யோசனையை சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள சியான்ஷாங் ஹாவ் என்ற ஒரு விவசாயி கொண்டுவந்தார் மேலும் தனது பண்ணையில் புத்தர் வடிவ பேரிக்காய்களை பயிரிட்டு, வெற்றிகரமாக சாகுபடியும் செய்தார்.

    இந்த பேரிக்காய்களை வளர்ப்பதற்கான செயல்முறை இயற்கையாக வளரும் பேரிக்காய்களிலிருந்து வேறுபடுகிறது, ஏனென்றால் அவை அச்சுகளில் உதவியோடு வளர்க்கப்படுகின்றன, அச்சுக்களே அந்த பழத்திற்கு புத்தர் சிலை வடிவத்தை அளிக்கின்றன.

    6) ரூபி ரோமன் திராட்சை (Ruby Roman Grapes)

    பொதுவாக திராட்சைகள் என்பது மனிதனோடு ஆதி காலம் முதலே தொடர்புபட்டது, இதன் சுவையை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம். பொதுவாக திராட்சையை wine-ஆகா தயாரித்து பருகும் வழக்கம் உலகம் முழுவது உள்ளது.

    அந்த வரிசையில் உலகின் மிக விலையுயர்ந்த திராட்சைகளைப் பற்றி பார்ப்போம். ரூபி ரோமன் திராட்சை எனப்படும் இந்த அரியவகை திராட்சையின் தாயகம் ஜப்பானில் உள்ள இசைக்கோவா மாவட்டம் ஆகும்.
    சில தகவல்களின்படி, 2020 ஆம் ஆண்டில் இந்த குறிப்பிட்ட வகை திராட்சைகளில் 24 திராட்சை கொண்ட ஒரு கொத்து சுமார் 7.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

    இது போன்ற சுவாரசியமான தகவல்களை அன்றாடம் தெரிந்துகொள்ள தினவாசல் செய்திகளோடு இணைந்திருங்க மக்களே !

    இதையும் படிங்க:தலைமையாசிரியர் கொடுத்த தண்டனை ? பெற்றோர் கண்முன்னே துடிதுடித்து உயிரைவிட்ட மாணவன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....