Monday, March 18, 2024
மேலும்
    Homeபிரேக்கிங் நியூஸ்இன்றைய ஐபில் ஆட்டம் ரத்தாகிறதா? டெல்லி அணியின் மற்றொரு வீரருக்கும்…

    இன்றைய ஐபில் ஆட்டம் ரத்தாகிறதா? டெல்லி அணியின் மற்றொரு வீரருக்கும்…

    டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி இன்று இரவு நடைபெற இருந்த நிலையில் டெல்லி அணியைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த போட்டி ரத்தாகலாம் அல்லது வேறு தேதியில் மாற்றியமைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    நேற்று முன்தினம், மிட்சல் மார்ஷுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மேலும் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட், குழு மருத்துவர் அபிஜித் சால்வி, ஸ்போர்ட்ஸ் மசாஜ் தெரபிஸ்ட் சேத்தன் குமார், மற்றும் சமூக ஊடக உள்ளடக்க குழு உறுப்பினர் என மொத்தம் ஐவருக்கு டெல்லி அணியில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று, டெல்லி அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ் மேனுமான நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்ட் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஐந்து பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, புனே மைதானத்தில் நடக்க விருந்த இன்றைய போட்டி மும்பை மைதானத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த ஐந்து பேருக்கும், தொற்று இல்லை என்று நெகடிவ் ரிப்போர்ட் காட்டினால் மட்டுமே மைதானத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. டெல்லி அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர். மேலும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

    இந்நிலையில் இன்று நடக்கவிருந்த டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கான போட்டியானது இன்று ரத்து ஆகலாம் அல்லது தேதி மாற்றியமைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அதிகார பூருவமான அறிவிப்பு இன்னும் பிசிசிஐ தரப்பில் இருந்து இன்னும் வரவில்லை. ஆகையால் போட்டி நடைபெறவும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த ஆண்டு நான்கு அணிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டதால் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....