Monday, March 18, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்ஐபிஎல் கேன்சலா? டெல்லிக்கு வந்த சோதனையால் வேடிக்கைக் காட்டும் மும்பை மற்றும் சென்னை ரசிகர்கள்!

    ஐபிஎல் கேன்சலா? டெல்லிக்கு வந்த சோதனையால் வேடிக்கைக் காட்டும் மும்பை மற்றும் சென்னை ரசிகர்கள்!

    ஐபில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஐபில் போட்டிக்கு புதிதாக ஒரு சோதனை வந்துள்ளது. வந்திருக்கும் இந்த சோதனை, டெல்லி அணியின் மூலமாகத்தான் வந்துள்ளது.

    ஆம்! டெல்லி அணியின் ஆல் ரவுண்டர் மிட்சல் மார்ஷ்க்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக பாசிட்டிவ் ஆன்டிஜென் டெஸ்ட் செய்யப்பட்டது. அப்போது அவருக்கு தொற்று இருப்பதாக தெரிந்தது. பின்பு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் உள்ள அனைவரும் தனிமைபடுத்தப்பட்டனர்.

    மிட்சல் மார்ஷ்க்கு ஆர்டி-பிசிஆர் சோதனை செய்தபோது தொற்று இல்லை என்பது உறுதியானது. மேலும் அணியில் உள்ள அனைவருக்கும் பாசிட்டிவ் ஆன்டிஜென் டெஸ்ட் (positive antigen test) மற்றும் ஆர்டி-பிசிஆர் (RT-PCR) சோதனை நடத்தப்பட்டு சோதனை முடிவுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற புதன் கிழமை டெல்லி அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் ஐபில் போட்டி கேள்விக் குறியாக இருந்த நிலையில் தற்போது அந்தப் போட்டி எந்தவித தடையுமின்றி நடக்கும் என்று தெரிகிறது. 

    இதனிடையே ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கேன்சல் ஐபில் (#cancelipl) என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவும் நிலையில் இந்த ஐபில் வேண்டாம் என்று தெரிவித்து வருகின்றனர். 

    இது ஒருபுறம் இருக்க சென்னை மற்றும் மும்பை அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ள நிலையில் சென்னை மற்றும் மும்பை ரசிகர்கள் கேன்சல் ஐபில் (#cancelipl) ஹேஷ்டேக்கை பயன்படுத்தி மீம்களை உருவாக்கி வேடிக்கை காட்டி வருகின்றனர். எங்கள் அணிகள் இல்லை பிறகு எதற்கு இந்த ஐபில் என்று கூறி கேன்சல் ஐபில்(#cancelipl) என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....