Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகொரோனாவை விட வீரியமான டெல்லி அணி; பரிதாபத்தில் பஞ்சாப்!

    கொரோனாவை விட வீரியமான டெல்லி அணி; பரிதாபத்தில் பஞ்சாப்!

    15-ஆவது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியானது பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால், பேட்டிங்கில் முதலில் பஞ்சாப் அணி களம் கண்டது. 

    பஞ்சாப் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மயங்க் அகர்வாலும், தவானும் இறங்கினர். தொடக்கத்திலேயே பஞ்சாப் அணியானது, தவானின் விக்கெட் இழப்பினால் அதிர்ச்சியைக் கண்டது. மேலும், நன்றாக விளையாடிக் கொண்டிருந்த மயங்க் அகர்வாலும் தனது விக்கெட்டை இழந்து பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சியைத் தந்தார். 

    இதன்பிறகு, பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசையை டெல்லி அணி சின்னாபின்னமாக்கியது. ஆம்! பஞ்சாப் அணியானது அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்து பாவமான நிலைக்குத் திரும்பியது. ஜித்தேஷ் சர்மா மட்டும் நிலைத்து ஆடி 32 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

    பஞ்சாப் அணியானது, மொத்தமாகவே இருபது ஓவர்களின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் கலீல் அகமத், லிலீத் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    இதனையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, டெல்லி அணி! பந்துவீச்சில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட டெல்லி அணியானது, பேட்டிங்கிலும் மிகவும் சிறப்பாக இருந்தது. டெல்லி அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக பிர்த்வி ஷா மற்றம் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர்.

    இருவருமே நிதானத்தையும், அதிரடியையும் ஒன்றாக தனது பேட்டிங்கில் காண்பித்தனர். 20 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த பிரித்வி ஷா, ராகுல் சஹார் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து ஆட்டக்களத்தில் சர்ஃப்ராஸ் கான் களமிறங்கினார். மறுபுறம் நிலைத்து ஆடிக்கொண்டிருந்த டேவிட் வார்னர் 30 பந்துகளுக்கு 60 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

    10.3 ஓவர்களுக்கே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்துவிட்டது, டெல்லி கேபிடல்ஸ். ஆட்டநாயகன் விருது குல்தீப் யாதவிற்கு வழங்கப்பட்டது. டெல்லி அணியின் இந்த வெற்றி, அணியை விமர்சித்தவர்கள் பலரையும் வாயடைக்கச்செய்துள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....